உலகளாவிய ஆலோசனைச் சேவை நிறுவனமான மக்கின்சே ஆண்ட் கம்பனி நிறுவனம், ஆசியாவுக்கான அதன் நீடித்த நிலைத்தன்மை புத்தாக்க மையத்தின் தலைமையகத்தை சிங்கப்பூரில் அமைத்துள்ளது. விவிட் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த மையம், நீடித்த நிலைத்தன்மை அம்சங்களைச் செயல்முறைகளில் சேர்த்துக்கொள்ள அரசாங்கங்களுக்கும் வர்த்தகங்களுக்கும் வகைசெய்யும்.
நீடித்த நிலைத்தன்மையை நோக்கிய பயணத்தில், கொள்கைகளில் பல மாற்றங்களைச் செய்யவேண்டியிருக்கும், பழைய, புதிய வர்த்தகங்களை மறுசீரமைக்கவேண்டியிருக்கும் என்றார் 'ஒன் ராஃபிள்ஸ் கீ'யில் அமைந்துள்ள விவிட் மையத்தின் திறப்பு விழாவில் கலந்துகொண்ட சிங்கப்பூரின் நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சர் கிரேஸ் ஃபூ.

