பார்வையாளர்களை மயக்க ஆயத்தமாகும் 100-நாள் பாண்டா

பார்வையாளர்களை மயக்க ஆயத்தமாகும் 100-நாள் பாண்டா

1 mins read
fea3c47b-2cbf-497b-9866-0631b2ee1513
'ஜயன்ட் பாண்டா' எனப்படும் பெரிய பாண்டா கரடிக் குட்டி. படம்: மண்டாய் வனவிலங்குக் குழுமம் -

சிங்­கப்­பூ­ரின் முதல் 'ஜயன்ட் பாண்டா' எனப்­படும் பெரிய பாண்டா கரடியின் குட்டி அடுத்த ஆண்டு தொடக்­கத்­தில் 'ரிவர் வொண்­டர்ஸ்' என்று அண்­மை­யில் பெயர் மாற்­றம் கண்ட 'ரிவர் சஃபாரி' பூங்­கா­வில் மக்­க­ளின் பார்­வைக்கு வைக்­கப்­படும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது. இக்கரடிக் குட்டி பிறந்து நாளை 100 நாட்கள் ஆகிறது.

முத­லில் வரும் வாரங்­களில் பார்­வை­யா­ளர்­கள் இந்­தப் பாண்டா குட்­டியை 'ஜயன்ட் பாண்டா ஃபாரஸ்ட் எக்­சி­பிட்' எனப்­படும் பெரிய பாண்டா கர­டி­க­ளுக்­கான கூடத்­தில் காண­லாம். அதற்­குப் பிறகு இச்செல்­லப் பிள்ளை தனது தாயு­டன் பொதுக் காட்­சி­ய­கத்­தில் வைக்­கப்­படும்.

இதன் உடல் எடை சுமார் ஆறு கிலோ­கி­ராம். இதன் தாயின் பெயர் ஜியா ஜியா. சிங்­கப்­பூ­ரும் சீனா­வும் இணைந்து பிள்­ளை­யின் பெயரை அடுத்த மாதம் வெளி­யி­டும். பெயரை வைக்­கப் பொது­மக்­கள் பரிந்­து­ரை­களை சமர்ப்­பித்­துள்­ள­னர்.