பதின்ம வயதுப் பெண்களைத் தாயாக்கிய 21 வயது ஆடவர்

2 mins read
7bf884ad-5201-49ff-8749-798eea39b989
-

இரு­பத்­தொரு வய­தில் மூன்று வெவ்­வேறு பெண்­க­ளைக் கருவுறச் செய்து, இரண்டு பிள்­ளை­களைப் பெற்ற ஆட­வ­ருக்கு நேற்று குறைந்­தது ஓராண்டு சீர்­தி­ருத்­தப் பயிற்சி விதிக்­கப்­பட்­டது.

பிள்ளை பெற்ற இரண்டு பெண்­களில் ஒரு­வர், பதி­னைந்து வய­தில் ஆட­வ­ரு­டன் பாலி­யல் உறவு கொண்­டார். அவர் அப்­போது சட்­டப்­படி வய­துக்கு வர­வில்லை.

மற்­றொ­ரு­வ­ருக்­குத் தற்­போது வயது 18 ஆகும். ஆட­வர் அவ­ரு­டன் உட­லு­றவு கொண்­ட­போது, சட்­டப்­படி வய­துக்கு வந்­தி­ருந்­தார்.

மூன்­றா­வ­தாக, 12 வயது சிறு­மி­யைக் கரு­வு­றச் செய்­தி­ருக்­கி­றார் அந்த ஆட­வர். ஆனால் சிறு­மிக்­குக் கருக்­க­லைப்பு செய்­யப்­பட்­டது.

மூன்று பெண்­களும் வெவ்­வேறு கால­கட்­டங்­களில் அவ­ரது காத­லி­க­ளாக இருந்­த­வர்­கள். ஆனால் அவர்கள் இப்­போது அவ­ரைப் பிரிந்து விட்­ட­னர்.

சட்­டப்­படி வய­துக்கு வரா­த வரு­டன் பாலி­யல் உறவு கொண்ட நான்கு குற்­றச்­சாட்­டு­களை ஆட­வர் கடந்த ஜூலை 13ஆம் தேதி ஒப்­புக்­கொண்­டார்.

தற்­போது 18 வய­தி­ருக்­கும் முன்­னாள் காத­லி­யைத் தாக்­கி­ய­தன் பேரில் ஒரு குற்­றச்­சாட்­டை­யும் அவர் ஒப்­புக்­கொண்­டார்.

குற்­ற­வா­ளிக்கு தண்­டனை விதிக்­கப்­பட்­ட­போது, மேலும் 17 குற்­றச்­சாட்­டு­கள் கவ­னத்­தில் எடுத்­துக்­கொள்­ளப்­பட்­டன. அவை பெரும்­பா­லும் சட்­டப்­படி வய­துக்கு வராத பெண்­க­ளு­டன் பாலி­யல் உறவு கொண்­ட­தன் தொடர்­பா­னவை. கடந்த 2017ஆம் ஆண்டு முதல் சென்ற ஆண்டு வரை அந்த ஆட­வர் குற்­றங்­க­ளைப் புரிந்­தார்.

குற்­றம் புரி­யத் தொடங்­கி­ய­போது ஆட­வ­ருக்கு வயது 16 என்­ப­தால் சட்­டப்­படி அவர் பெயரை வெளி­யிட முடி­யாது.

பெண்­க­ளின் பெயர் விவ­ரங்­களை வெளி­யி­டக்கூடாது என்று உத்­த­ரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குற்­றம் புரிந்த ஆட­வர் குறைந்­தது ஓராண்டு சீர்­தி­ருத்­தப் பயிற்சி­ யின்­போது தடுத்­து­வைக்­கப்­ப­டு­வார்.

குற்­ற­வா­ளிக்கு நேற்று $15,000 பிணை நிர்­ண­யிக்­கப்­பட்­டது.

தண்­ட­னை­கா­லத்­தைத் தொடங்க அவர் அடுத்த மாதம் 17ஆம் தேதி அரசு நீதி­மன்­றத்­தில் சர­ண­டைய வேண்­டும் என்று உத்­த­ர­வி­டப்­பட்­டது.

பதி­னான்கு வய­துக்­குக்கீழ் உள்ள சிறு­வ­ரு­டன் பாலி­யல் உறவு கொள்­வோ­ருக்கு 20 ஆண்­டு­கள் வரை சிறைத்­தண்­டனை, பிரம்­படி அல்­லது அப­ரா­தம் விதிக்­கப்­ப­ட­லாம்.