கடைசியாக சுமார் 30 ஆண்டு களுக்கு முன்பு இங்கு காணப்பட்ட சாம்பல் கோடுள்ள ஈப்பிடிப்பான் குருவி (grey-streaked flycatcher) இம்மாதம் 9ஆம் தேதி மீண்டும் இங்கு தென்பட்டுள்ளது.
செம்பவாங்கில் காணப்பட்ட ஒற்றைக் குருவியை இயற்கை ஆர்வலர் ஒருவர் புகைப்படம் எடுத்தார்.
அந்த வகை சாம்பல் கோடுள்ள ஈப்பிடிப்பான் குருவி முதன்முறையாக கடந்த 1991ஆம் ஆண்டு இங்கு காணப்பட்டது. இப்போது இரண்டாவது முறையாக அது சிங்கப்பூரில் தென்பட்டுள்ளது.
மெல்லிய சிறகுகள் கொண்ட அந்தக் குருவி, வழக்கமாக தென்கிழக்காசியாவில் காணப் படுவதில்லை என்று 'பர்ட்லைஃப் இண்டர்நேஷனல்' எனும் அமைப்பைச் சேர்ந்த டாக்டர் யோங் டிங் லி கூறினார்.
சாம்பல் கோடுள்ள ஈப்பிடிப்பான் குருவிகள், பிலிப்பீன்ஸ், கிழக்கு இந்தோனீசியா ஆகியவை வழியாக இடம்பெயரும் பறவைகள் என்று அவர் கூறினார்.
அவை, பசிஃபிக் கடல் பாதையைப் பின்பற்றி வருவதாக டாக்டர் யோங் தெரிவித்தார்.
ஒற்றைக் குருவி வழி தெரியாமல் இங்கு வந்து சேர்ந்திருக்கலாம் என்று அவர் சொன்னார்.