முன்பைவிட கூடுதலான சிங்கப்பூரர்கள் தங்கள் சொத்துக்களைப் பெருக்க வழிகளைத் தேடி வருவதாக யுஓபி வங்கி நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
யுஓபி வங்கியின் ஆசியான் வாடிக்கையாளர் கருத்தாய்வின் முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. ஆய்வில் கலந்துகொண்டவர்களில் சுமார் 38 விழுக்காட்டினர் கடந்த ஆறு மாதங்களில் முதலீடுகளில் கூடுதல் பணம் செலுத்தியுள்ளதாகக் கூறினர். இது ஆண்டைவிட எட்டு விழுக்காடு அதிகமாகும்.
இருபத்து மூன்று வயது முதல் 39 வயது வரை பிறந்த மிலெனியல் எனப்படும் வயதுப் பிரிவினரில் 46 விழுக்காட்டினர் மேலும் அதிகமான பணத்தை முதலீடு செய்யவிருப்பதாகக் கூறினர்.
ஒப்புநோக்க, 55 வயதுக்கும் அதிகமானவர்களில் 11 விழுக்காட்டினர் மட்டுமே முதலீடுகளை அதிகப்படுத்தப் போவதாகத் தெரிவித்தனர். 40 வயது முதல் 55 வரையிலான வயதுப் பிரிவினரில் 35 விழுக்காட்டினர் அவ்வாறு கூறினர்.
முதலீடுகளைச் செய்துள்ள சிங்கப்பூரர்களில் 51 விழுக்காட்டினர், கூடுதலான பங்கு பத்திரங்களை வாங்கத் திட்டமிட்டுள்ளனர்.
ஆய்வில் கலந்துகொண்ட ஒட்டுமொத்த ஆசியான் மக்களில் 64 விழுக்காட்டினர் தங்கள் குடும்பச் செலவு அதிகமானதைக் குறித்து நெருடல் இருப்பதாகக் கூறினர்.
கிருமிப் பரவல் தொடங்கியபோது வரவு செலவுகளில் செய்த மாற்றங்களை தொடர்ந்து கடைப்பிடித்து வருவதாக பாதிப் பேருக்கு மேல் தெரிவித்தனர்.

