முஸ்லிம் லீக் (சிங்கப்பூர்) சமூக நல்லிணக்க சேவை அமைப்பின் மகளிர் பிரிவான வளர்பிறை மகளிர் வட்டத்தின் இரண்டாம் ஆண்டின் தொடக்கவிழா இம்மாதம் 14ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
"குன்றென நிமிர்ந்து நில்" எனும் கருப்பொருளைக் கொண்ட கருத்தரங்கம் நிகழ்ச்சி யின் ஒரு பகுதியாக நடைபெற்றது.
சிங்கப்பூர் தேசியப் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த இணைப் பேராசிரியர் சித்ரா சங்கரன், இந்த கருத்தரங்கிற்கு தலைமை ஏற்றதுடன், நிகழ்வின் சிறப்பு விருந்தினராகவும் பங்கேற்று சிறப்புரை ஆற்றினார்.
வளர்பிறை மகளிர் வட்டத்தின் தலைவர் மஹ்ஜபீன், துணைத்தலைவர்கள் மிஸ்காத் பேகம், நபிலா நஸ்ரின், உதவிச் செயலாளர் நர்கீஸ் பானு, துணைப் பொருளாளர் நஸ்ரின் பானு ஆகியோர் கருத்தரங் கில் சிறப்புக் கட்டுரைகளைப் படைத்தனர்.
முயிஸ் அமைப்பு வழங்கிய 2021 ஆண்டுக்கான 'ஜாஸா பக்தி' விருதைப் பெற்ற இந்திய முஸ்லிம் பேரவைத் தலைவரும், முஸ்லிம் லீக் (சிங்கப்பூர்) அமைப்பின் பொதுச் செயலாளருமான முஹம்மது கெளஸைப் பாராட்டும் அங்கமும் நடைபெற்றது.
ஸூம் மற்றும் நேரலை மூலம் உள்ளூரையும் வெளிநாடுகளையும் சேர்ந்த பார்வையாளர்கள் நிகழ்ச்சியில் இணைந்திருந்தனர்.