முரசொலி
கொவிட்-19 தொற்று உலக மக்கள் செயல்படும் பாணியைத் தலைகீழாக மாற்றிவிட்டது. வீட்டில் இருந்தே வேலை, வெளியே சென்று உடற்பயிற்சி உள்ளிட்ட பலவற்றிலும் கலந்துகொண்டு சுறுசுறுப் பாக ஒவ்வொரு நாளையும் கழிக்க இயலாத நிலை, எல்லாம் சேர்ந்து மொத்தத்தில் மனிதர்களிடத்தில் சோம்பேறித்தனம் அதிகமாக கொரோனா வழிகோலி இருக்கிறது.
வாழ்க்கையில் இதுவரை கண்டிராத கொரோனா பிரச்சினைகளை, ஒருநாள், இரு நாட்கள் அல்ல, ஆண்டுக்கணக்கில் சந்திக்க வேண்டியநிலையில், மக்களின் உடல்நலப் பாதிப்பு குறிப்பிடத்தக்க அளவுக்குக் கூடி இருக்கிறது.
உடல்நலப் பிரச்சினைகள் மட்டுமின்றி அதைவிடப் பெரிதாக மனிதர்களின் மனநலமும் பெரும் சவாலுக்கு இலக்காகி உள்ளது.
சமூகத்தில் சுதந்திரமாக கலந்துறவாட முடித நிலை, வேலை தொடர்பான அச்சம், வருவாய் குறைவு, பிள்ளைகளைப் படிக்கவைக்க வேண்டிய தேவை, பெற்றோரைக் கவனித்துக்கொள்ள வேண்டிய அவசியம் எல்லாம் மனதளவில் மக்களிடம் பெரும் பாதிப்பையும் உளைச்சலையும் ஏற்படுத்தி இருக்கின்றன. கொரோனா காரணமாக உடல்நலப் பாதிப்பைவிட மனநலப் பாதிப்பு அதிக அச்சத்தைக் கிளப்புவதாக இருக்கிறது.
ஆக்ககரமான, நம்பிக்கைமிக்க மனநிலையைக் கொண்டவர்கள்கூட மனச்சோர்வு அடைந்து, மனதளவில் உடைந்துபோய் இருக்கிறார்கள். சமூகத்தில் எல்லா நிலைகளையும் சேர்ந்தவர்கள் இவர்களில் அடங்குவர்.
சிங்கப்பூர் மக்கள் உலகிலேயே ஆக அதிக ஆயுள் உள்ளவர்கள். உடல் நலன், மனநலன்மிக்கவர்கள். இருந்தாலும் அவர்களும் இதற்கு விதிவிலக்கு அல்ல. சிங்கப்பூர் மக்களின் உடல், மனநலன் குறைந்து இருக்கிறது என்ற ஒரு தகவல் வெளிகி இருப்பது மனக் கவலையை அதிகப்படுத்து வதாக இருக்கிறது.
தேசிய மக்கள் தொகை சுகாதார ஆய்வு முடிவுகள் அண்மையில் வெளியிடப்பட்டன. மக்களிடம் நெடுநாள் நீடிக்கக்கூடிய நோய்கள் கூடியுள்ளன. நலமற்ற வாழ்க்கை பாணி அதிகமாகி இருக்கிறது.
உயர் ரத்த அழுத்த நோல் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் எண்ணிக்கை இரண்டே ஆண்டுகளில் பாதி அளவுக்கு அதிகரித்துள்ளது. 2017ல் 24.2% ஆக இருந்த இந்த அளவு, சென்ற ஆண்டு மார்ச் மாதத்துடன் முடிவடைந்த எட்டு மாத காலத்தில் 35.5% ஆகக் கூடி இருப்பதாக அந்தக் கால கட்டத்தில் நடத்தப்பட்ட ஆய்வு குறிப்பிடுகிறது.
அதே காலத்தில் நீரிழிவு நோய் விகிதம் 8.8% லிருந்து 9.5% ஆகக் கூடிவிட்டது. இந்த நோய்க்கு எதிராக கடந்த ஐந்து ஆண்டு காலமாக சிங்கப்பூரில் பெரும் முயற்சிகள் இடைவிடாது எடுக்கப்பட்டுவரும் போதிலும் இந்த நோய் ஏறுமுகமாக இருக்கிறது என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது.
அளவுக்கு அதிகமாக மக்கள் குடிக்கிறார்கள். 8.8% ஆக இருந்த இந்த அளவு 10.5% ஆக அதிகரித்து உள்ளது. சிகரெட் புகைப்பதற்கான குறைந்தபட்ச வயது அதிகமாக்கப்பட்டதால் புகைப்போர் அளவு 11.8%லிருந்து 1.1% ஆகக் குறைந்துள்ளது.
என்றாலும் இதை நினைத்து மகிழ்ச்சி அடைய முடித அளவுக்கு இதர உடல் நலப்பிரச்சினைகள் அதிகரித்து உள்ளன என்பதே உண்மை.
ஒருவரின் உடல் நலனுக்கு அவரின் உணவு பாணி முக்கியமானது. உடலில் ரத்த அழுத்தம் கூடுவதற்கு சோடியம் எனப்படும் உப்பை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்வது ஒரு காரணம்.
ரத்த அழுத்தம், அதிக உப்புப் பிரச்சினை கவலை தரும் அளவுக்கு இருக்கிறது. ஒருவர் அன்றாடம் எவ்வளவு உப்பை சாப்பாட்டில் சேர்த்துக்கொள்ளலாம் என்பதை உலக சுகாதார நிறுவனம் வரையறுத்து பரிந்துரைத்துள்ளது. ஆனால் சிங்கப்பூரில் உப்பு பயனீடு அந்த அளவைவிட அதிகமாக உள்ளது.
ஆகைல் இந்தப் பிரச்சினையில் ஒருமித்த கவனம் செலுத்தும் அளவுக்குத் தேசிய அளவில் உத்திகள், செயல்திட்டங்கள் தேவை என்ற ஒரு நிலை அவசியமாகி இருக்கிறது.
சர்க்கரையை அதிகமாக சேர்த்துக்கொள்ளக்கூடாது என்பதை வலியுறுத்துவதற்கு மேற்கொள்ளப்படும் அளவுக்கு உப்புக்கு எதிராகவும் கவனம் செலுத்தப்படவேண்டும்.
நீரிழிவுக்குச் சர்க்கரை, அதிக ரத்த அழுத்தத்திற்கு உப்பு முக்கிய காரணம் என்பதை மக்கள் உணர்ந்துகொள்ளுமாறு செய்ய வேண்டும்; உப்பைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி, அதைக் குறைத்துக்கொள்ளும்படி மக்களுக்கு ஊக்கமூட்ட அதிகாரிகள் முயற்சிகளை முடுக்கிவிடுகிறார்கள்.
தேசிய அளவில் இயக்கம் ஒன்றைத் தொடங்க திட்டமிடுகிறார்கள் என்பது இதில் குறிப்பிடத்தக்க ஒன்று. இவற்றுக்கெல்லாம் கொரோனா தொற்று முக்கிய காரணம் என்பதை மறுப்பதற்கில்லை.
கொவிட்-19 தொற்று காரணமாக ஏற்பட்டுள்ள உடல்நல மாற்றங்கள் நீண்ட காலப்போக்கில் எதிரொலிக்கும் என்பதற்குத் தகுந்த காரணங்கள் இல்லாமல் இல்லை. இதற்கான ஓர் அடைளமாகவே அண்மைய ஆய்வு முடிவுகளைப் பார்க்கலாம்.
எது எப்படி இருந்தாலும் மக்கள் தங்கள் உடல், மனநலனைப் பொறுத்தவரை இப்போதே விழித்துக் கொள்ள வேண்டும். கொரோனா ஒருநாள் போய்விடும். ஆனால் அதன் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகள் நமக்குப் பெரிய அளவில் நெடுநாள் சுமை கிவிடக் கூடாது.
கொவிட்-19 காரணமாக வாழ்க்கைப் பாணி மாறி இருப்பதால் உடல் உழைப்பு குறைந்து இருப்பதால் உடல் பருமன் கூடி அதனால் பல நோய்கள் உடலில் நெடுநாள் குடியிருக்கும் நிலை வரலாம். இப்படிப்பட்ட ஒரு பாதகச் சூழலை சிங்கப்பூரர்கள் தவிர்த்துக் கொள்ளவேண்டும்.
சிங்கப்பூரர்கள் தங்கள் உடல், மனநலனைத் தற்காத்துக்கொள்ள பக்குவமான முறையில் முழுமை ன அணுகுமுறையை அவர்கள் கைகொள்ள வேண்டும்.
வாழ்வில் எவ்வளவு சிரமங்கள், மிரட்டல்கள் வந்தாலும் அவற்றைச் சமாளித்து வென்றுவிடவேண்டும் என்ற மனஉறுதி முக்கியம். அதேபோல, உடல்நலனில் அவர்கள் மிக முக்கியமாக தங்கள் சாப்பாட்டில் கவனம் செலுத்த வேண்டும். உப்பைக் குறைக்க வேண்டும்.
கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் ஒரு வழியாக வென்றுவிட்ட நிலையில், உடல், மனநலன் போராட்டத்தில் நாம் தோற்றுவிட்டால் அது முழுமை யான வெற்றியாக இராது.
ஆகையால் கொரோனாவை வீழ்த்துவதோடு மட்டுமின்றி அதனால் ஏற்படக்கூடிய உடல், மனநல மிரட்டல்களையும் நாம் வீழ்த்த வேண்டும். இதைச் சாதிப்பது ஒவ்வொருவரின் பொறுப்பு, கடமை, அவசியம் என்பதை மக்கள் மறந்துவிடக்கூடாது.