'வாழ்க்கையோடு விளையாடாதீர்கள். கொவிட்-19 தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளுங்கள்' என்று தடுப்பூசியைத் தவிர்க்கும் மக்களை மருத்துவச் சேவைகள் துறை இயக்குநர் ெகன்னத் மாக் வலியுறுத்தினார்.
கொவிட்-19 அமைச்சுகள் நிலை பணிக்குழு செய்தியாளர் கூட்டத்தில் பேசிய அவர், வயது எப்படி இருந்தாலும் ஒவ்வொருவரும் தடுப்பூசியை, பூஸ்டர் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளவேண்டும் என்று குறிப்பிட்டார்.
கொரோனாத் தொற்று காரணமாகப் பாதிக்கப்படும் வயது குறைந்தவர்கள், குறிப்பாக 20 முதல் 30 வயது வரை உள்ளவர்கள் விகிதம் அதிகரிப்பதை அவர் சுட்டிக்காட்டினார்.
தொற்று ஏற்படக்கூடிய குறைந்த வயது மக்கள் எல்லாருமே அதில் இருந்து குண மடைந்துவிடலாம் என்ற எண்ணம் கூடாது என்று குறிப்பிட்ட அவர், சிங்கப்பூர் இதில் மெத்தனமாக இருந்தவிடலாகாது என்றார்.
கடந்த வெள்ளிக்கிழமை நிலவரப்படி கொரோனா தொற்றுக்கு ஆளானவர்களில் 15.6 விழுக்காட்டி னருக்கு வயது 20 முதல் 30 வரை. இந்த விகிதம் ஒரு வாரத் திற்கு முன் 14.2%.
வெளியே சென்றுவர வேண்டிய தேவை இளம் வயதினருக்கு அதிகமாக இருக்கலாம் என்பதால் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் நிலையில் அவர்களில் அதிக மானோர் தொற்றுக்கு ஆளாகக்கூடிய நிலை வரலாம் என்றாரவர்.