சிங்கப்பூர்-மலேசியா தரைவழிப் பயணம் இம்மாதம் முடிவில் தொடங்க வாய்ப்பு

சிங்­கப்­பூர்-மலே­சியா தரைப்­பா­லம் இந்த மாத முடி­வில் திறக்­கப்­ப­ட­லாம் என்று கொவிட்-19 அமைச்சு கள்நிலை பணிக்­குழு நேற்றுத் தெரி­வித்­தது. முற்­றி­லும் தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டோ­ருக்­கான பயண ஏற்­பாட்டை நடப்­புக்குக் கொண்டு வரு­வது பற்றி இந்த இரு நாடு­களும் பேச்­சு­வார்த்தை நடத்தி வரு­கின்­றன.

தரை எல்­லையை இந்த மாத முடி­வில் திறக்­க­லாம் என்று தாங்­கள் நம்­பு­வ­தாக கொவிட்-19 பணிக்­கு­ழு­வின் இணைத் தலை­வர் கான் கிம் யோங் தெரி­வித்­தார்.

என்­றா­லும் திறக்­கப்­படும் தேதி எதை­யும் அவர் உறு­திப்­ப­டுத்­த­வில்லை. அடுத்த வாரம் மேல்விவ­ரங்­கள் அறி­விக்­கப்­படும் என்­றும் சிங்­கப்­பூ­ரர்­கள் தேவை­யான ஏற்­பா­டு­க­ளைச் செய்­து­கொள்ள கால­அ­வ­கா­சம் இருக்­கும் என்­றும் திரு கான் குறிப்­பிட்­டார்.

தொடக்­கத்­தில் ஒவ்­வொரு நாளும் குறிப்­பிட்ட அள­வு­டன் பயணி­க­ளின் எண்­ணிக்­கைக்கு வரம்பு விதிக்­கப்­படும் வாய்ப்பு இருப்­ப­தா­க­வும் அவர் கூறி­னார்.

இங்கு சிங்­கப்­பூ­ரில் வேலை பார்க்­கும் சிலர் மலே­சியா சென்று தங்­கள் குடும்­பத்­தாரைச் சந்­திக்க விரும்­பு­கி­றார்­கள். மலே­சி­யா­வில் வேலை பார்க்­கும் சிங்­கப்­பூ­ரர்­கள் இங்கு திரும்­பி­வர விரும்­பு­கி­றார்­கள் என்­பதை அவர் சுட்­டி­னார்.

ஆகை­யால் தரை­வழிப் பயண ஏற்­பாட்­டின் முதல் கட்­டம் இத்­தகைய பய­ணி­கள் மீது ஒரு­மித்த கவ­னம் செலுத்­தக்­கூ­டிய வாய்ப்பு இருப்­ப­தா­க­வும் அவர் குறிப்­பிட்­டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!