புற்றுநோய் உள்ள பிள்ளைகளுக்காக 350,000 வெள்ளி நன்கொடையை ஓர் அமைப்பு திரட்டியுள்ளது. புகழ்பெற்ற ஓவியர் லின் லு ஸாய் 120 ஓவியங்களில் 78 ஓவியங்களை விற்றுள்ளனர்.
புற்றுநோய் உள்ள பிள்ளைகளுக்கான விவா அறநிறுவனமும் எஸ்பிரேஷன் நுண்கலைச் சங்கமும் இணைந்து நடத்திய இந்த முயற்சியின்போது 100,000 வெள்ளிக்கு மேலான நிதி திரட்டப்பட்டுள்ளது. சீன மை மற்றும் எண்ணெய் சித்திரங்கள், ‘இகிபானா’ என்ற ஜப்பானிய மலர் அலங்காரம் ஆகியவை கண்காட்சியில் வைக்கப்பட்டன.
சமூகங்களை ஒன்றிணைக்கவும் உற்சாகத்தை அளிக்கவும் ஆற்றலைக் கலை கொண்டிருப்பதாக கண்காட்சியைத் திறந்து வைத்த தொடர்பு, தகவல் அமைச்சர் ஜோசஃபின் டியோ தெரிவித்தார். “நிதித்திரட்டுக்கு அப்பாற்பட்ட இந்தக் கண்காட்சியின் பங்களிப்பு இதுதான்,” என்றார் திருவாட்டி டியோ.
கடந்த புதன் முதல் இன்று வரை கண்காட்சி நீடித்தது