தூய்மை, பசுமைமிகு நாடு: அனைவருக்கும் பொறுப்பு

2 mins read
8c2ad4a6-48e7-48d5-95a7-2ede058061f0
-

சிங்­கப்­பூரை தூய்மை, பசு­மை­மிக்க நாடாக வைத்­தி­ருப்­ப­தில் ஒவ்­வொரு சிங்­கப்­பூ­ர­ருக்­கும் பொறுப்பு உள்­ளது என்­றும் அவர்­கள் அந்­தப் பொறுப்பை நிறை­வேற்ற வேண்­டும் என்­றும் துணைப் பிர­த­மர் ஹெங் சுவீ கியட் வலி­யு­றுத்தி இருக்­கி­றார்.

சிங்­கப்­பூ­ரில் முதலாவது மரம் நடும் நாள் இடம்­பெற்று 50 ஆண்­டு­கள் ஆகின்­றன. 50 ஆண்­டு­க­ளுக்கு முன் நடப்­பட்ட தாவ­ரங்­கள் ஆழ­மாக வேரூன்றி அழ­கான மரங்­களாக இன்று பரந்த பசு­மை­யா­கத் திகழ்­கின்­றன என்­றார் அவர்.

அதே­போன்று தூய்மை, பசுமை இயக்­கம் தொடர்ந்து வரும் ஆண்டு­களில் ஆழ­ம­டைய வேண்­டும். அக­ல­ம­டைய வேண்­டும் என்று அவர் வலி­யு­றுத்­தி­னார்.

சிங்­கப்­பூ­ரின் முதல் மரம் நடும் நாள் 1971ல் இடம்­பெற்­றது. நாட்­டின் முன்னோடித் தலை­வர்­களில் ஒரு­வரான டாக்­டர் கோ கெங் சுவீ மவுண்ட் ஃபேபரில் ஊசி­யி­லைச் செடி ஒன்றை நட்­டார்.

சிங்­கப்­பூ­ரில் மரம் நடும் கலா­சா­ரம் ஒரு தேசிய மர­பாக செழித்து இருக்­கிறது என்று அந்த இடத்­தில் இருந்து நேற்று வெளி­யி­டப்­பட்ட ஒலிப்­ப­தி­வில் துணைப் பிர­த­மர் தெரி­வித்­தார்.

மரம் நடும் நாள் தூய்மை, பசுமை சிங்­கப்­பூர் இயக்­க­மாக விரி­வ­டைந்து இருக்­கிறது. அந்த இயக்­கம் நேற்று தொடங்­கப்­பட்­டது.

நாட்டை பசு­மை­யா­க­வும் விர­யங்­களைக் குறைத்து தூய்­மை­யா­க­வும் எப்­படி வைத்­துக்கொள்­ள­லாம் என்­பது பற்றி திரு ஹெங் தனது உரை­யில் விளக்­கி­னார்.

சிங்­கப்­பூ­ரில் அடுத்த 10 ஆண்டு­களில் ஒரு மில்­லி­யன் மரங்­களை நடும் இயக்­கம் தொடங்கி இருக்­கிறது. மக்­கள் அதில் கலந்துகொண்டு நாட்டை பசு­மை­யாக வைத்­தி­ருக்க முடி­யும் என்று அவர் குறிப்­பிட்­டார்.

தேசிய காய்­கறித் தோட்ட இயக்­கத்­தில் அவர்­கள் பங்­கெ­டுக்­க­லாம் என்­றார் அவர். தேவைப்­ப­டு­வதை மட்­டுமே சிங்­கப்­பூ­ரர்­கள் வாங்­க­வேண்­டும். பல முறை பயன்­ப­டுத்­தக்­கூ­டிய பைக­ளை­யும் பாத்­தி­ரங்­களை­யும் அவர்­கள் பயன்­ப­டுத்த வேண்­டும். இதன்­மூ­லம் அவர்­கள் குப்­பை­க­ளைக் குறைக்­க­லாம்.

குப்­பை­களை அவற்­றுக்­கான தொட்­டி­களில் போடும் பழக்­கம் நிலை­பெற வேண்­டும் என்­ற அவர், நிறு­வ­னங்­களும் இதில் பங்­காற்ற முடி­யும் என்று கூறினார்.

நாட்டை தூய்­மை­யாக வைத்­திருக்க வேண்­டி­யது முக்­கி­ய­மானது என்றும் துப்­பு­ரவு, தூய்மை எந்த அள­வுக்கு முக்­கி­யம் என்­பதை கொவிட்-19 நமக்கு போதித்து இருப்­ப­தாகவும் திரு ஹெங் குறிப்­பிட்­டார். கம்­போங் அட்­மி­ரல்­டி­யில் நடந்த தூய்மை, பசுமை சிங்­கப்­பூர் 2021 இயக்­கம் தொடக்க நிகழ்ச்சி­யில் அடித்­தள அமைப்­பு­க­ளுக்கு 16 தேசிய விரு­துகளைத் துணைப் பிர­தமர் வழங்­கி­னார். வட­மேற்கு மாவட்ட மேயர் அலெக்ஸ் யாமு­டன் சேர்ந்து அரிய மரக்­கன்று ஒன்றை திரு ஹெங் நட்­டார்.

தேசிய வளர்ச்சி அமைச்­சர் டெஸ்­மண்ட் லீ, நீடித்த, நிலைத்­தன்மை, சுற்­றுப்­புற மூத்த துணை அமைச்­சர் டாக்­டர் ஏமி கோர் ஆகி­யோரும் செடி­களை நட்­ட­னர்.

நேற்­றைய நிகழ்ச்­சி­யை­யொட்டி 'சிஜி­எஸ் அனு­ப­வங்­கள்' என்ற இணையக் கருத்­த­ரங்குத் தொடர் ஒன்­றும் தொடங்­கப்­பட்­டது. அதில் பங்­கெ­டுக்க அடுத்த ஆண்டு மார்ச் 31 வரை ­மக்­கள் முன்­ப­திவு செய்து கொள்­ள­லாம்.