கொவிட்-19 சிகிச்சைக்கு 'லியான்ஹுவா சிங்வென்' என்ற சீன மருந்தைப் பயன்படுத்துவது பற்றி ஓர் ஆய்வை நடத்த சுகாதார அமைச்சு பொறுப்பாதரவு அளித்தது என்று மக்கள் சக்தி கட்சியைச் சேர்ந்த கோ மெங் செங் ஃபேஸ்புக்கில் தெரிவித்து இருந்தார்.
அந்த ஆய்வின் முடிவுகளை அரசு ஏன் வெளியிடவில்லை என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
ஆனால் கோ மெங் செங்
தெரிவித்தது ஆதாரமற்றது என்று சுகாதார அமைச்சு நேற்று கூறியது.
பாரம்பரிய சீன மருந்து ஆய்வு மானியத்தின் கீழ் ஓர் ஆய்வை நடத்த அமைச்சு பொறுப்பாதரவு வழங்க முன்வந்தது என்றும் ஆனால் ஆய்வின் பிரதான ஆய்வாளர் தனது விண்ணப்பத்தை மீட்டுக்கொண்டதாகவும் சுகாதார அமைச்சு விளக்கியது.