தம்பி உடையான் போட்டிக்கு அஞ்சான்

தம்பி உடை­ய­வர்­கள் படைக்­குக்­கூட அஞ்­சத் தேவை­யில்லை என்று கூறு­வ­துண்டு.

அடுத்த மாதம் உல­கத் தரைப்­பந்துப் (floorball) போட்டியில் கலந்துகொள்­ளும் சிங்­கப்­பூ­ர் அணி­யின் தலை­வர் ஆர் சூர்­யா­வுக்கு இது சரி­யா­கப் பொருந்­தும்.

தரைப்­பந்து அணி­யில் இவ­ரது தம்பி ஆர் சதீ­ஷும் இடம்­பெற்­றுள்­ளார்.

ஆனால் அந்த அணி­யில் இடம்­பி­டித்­துள்ள சகோ­த­ரர்­கள் இவர்­கள் மட்­டு­மல்ல. இரு­பத்து ஐந்து வயது இரட்­டை­ய­ரான விக்­னேசா பசு­பதி, கும­ரேசா பசு­ப­தி­யும் சிங்­கப்­பூர் குழு­வில் இடம்­பி­டித்­துள்­ள­னர்.

உல­கத் தரைப்­பந்து வெற்­றி­யா­ளர் கிண்­ணத்­துக்­குச் செல்­லும் அணி­யில் இரண்டு வெவ்­வேறு அண்­ணன் தம்­பி­கள் தேர்வு செய்­யப்­பட்­டி­ருப்­பது இதுவே முதல்முறை என்று சிங்­கப்­பூர் தரைப்­பந்­துச் சங்­கம் கூறி­யுள்­ளது.

உல­கத் தரைப்­பந்து போட்டி இம்முறை ஃபின்லாந்து தலை­ந­கர் ஹெல்­சிங்கி நக­ரில் டிசம்­பர் 3ஆம் முதல் 11ஆம் தேதி­ வரை நடை­பெ­றும். மொத்­தம் 16 அணி­கள் இதில் பங்­கு­பெ­று­கின்­றன.

இயந்­தி­ரத் துறைப் பொறி­யாள­ரான சூர்யா, 29, சிங்­கப்­பூர் அணி­யின் தலை­வ­ரா­கக் கலந்­து­கொள்­ளும் முதல் அனைத்­து­ல­கப் போட்டி இது. சகோ­த­ரர்­கள் ஒன்­றாக உல­கப் போட்­டி­களில் விளை­யா­டு­வது அரிது என்­ப­தால், தம்பி தமக்­குப் பக்­க­ப­ல­மாக ஆட­வி­ருப்­பதை நினைத்து மகிழ்­வ­தாக அவர் கூறி­னார்.

ஆய்­வுப் பொறியாளரான அவ­ரது தம்பி சதீ­ஷுக்கு, அண்­ண­னு­டன் சேர்ந்து தேசிய அணிக்­காக ஆட­வேண்­டும் என்ற கனவு பலித்­தி­ருக்­கிறது.

"அண்­ணன் சூர்யாதான் எனக்கு முன்­னு­தா­ர­ணம். அவ­ரது ஆட்­டத் திற­னை­யும் அனு­ப­வத்­தை­யும் பெறு­வதே தமது இலக்கு," என்­றார் சதீஷ், 27.

உல­கத் தரைப்­பந்­துப் போட்­டி­யில் இவர் பங்­கு­பெ­று­வது இதுவே முதல்­மு­றை­யா­கும்.

தம்பி கும­ரேசாதான் தமக்­கான மிகக் கடு­மை­யான விமர்­ச­னங்­களை முன்­வைப்­பார் என்­றார் விக்­னேசா. அவ­ரும் தம்­பிக்­குச் சளைத்­த­வ­ரில்லை.

விக்­னேசா, கும­ரேசா இரு­வ­ரும் ஏற்­கெ­னவே சென்ற 2016ஆம் ஆண்டு லாட்­வி­யா­வில் நடந்த உல­கத் தரைப்­பந்­துப் போட்­டி­யில் ஒன்­றா­கப் பங்­கே­டுத்­துள்­ள­னர்.

ஆனால் 2018ஆம் ஆண்­டுப் போட்­டி­யில் கும­ரே­சா­வுக்­குக் காலில் தசை­நார் காயம் ஏற்பட்ட காரணத்தால் போட்­டியை விட்டு வில­க­வேண்­டிய சூழல்.

இருந்­தா­லும் அண்­ணன் பயிற்சி செய்­யும் காணொ­ளி­யைப் பார்த்­து­ விட்டு ஆட்­டத்­தில் திருத்­தங்­க­ளைக் கூறு­வார் கும­ரேசா.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!