ஆண்டிறுதி விடுமுறையில் இளையர்கள் கலந்துகொள்ளக்கூடிய சில பயனுள்ள நிகழ்ச்சிகள் பின்வருமாறு:
தொடக்கக்கல்லூரியா, பலதுறைத்தொழிற்கல்லூரியா அல்லது கலைத்துறையா, தொழில்நுட்பமா என்ற கேள்விகள் உள்ளோர் தேசிய இளையர் மன்றத்தின் ஓஎம்வி கட்டமைப்பு நடத்தும் விளக்க நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளலாம். வெவ்வேறு துறைகளைச் சேர்ந்த முன்னாள் மாணவர்களிடம் உரையாடலாம்.
வரும் டிசம்பர் 6ம் தேதி முதல் ஜனவரி 13ம் தேதி வரை உரையாடல்கள் இணையத்தில் நடைபெறும். மேல்விவரம்: https://youthopia.sg/events/omw-network-connects/
கலை அறிவியல் அரும்பொருளகத்தில் (ArtsScienceMuseum) காட்சி வழி கதைசொல்லும் (Visual Storytelling) பயிலரங்கு டிசம்பர் 11ம் தேதி நடைபெறும். கடல் பல்லுயிர்த்தன்மை பற்றிய ஓவியத்தை அல்லது கவிதையை இளையர்கள் உருவாக்கலாம். மேல்விவரம்: https://www.eventbrite.sg

