பயண அனுமதி விண்ணப்பங்களுக்கான இணையப்பக்கம் முடங்கியது

பயண அனுமதி விண்ணப்பங்களுக்கான இணையப்பக்கம் முடங்கியது

1 mins read
51d4800c-f546-4037-ba85-197e9325ce71
-

வெளி­நாட்­டுப் பய­ணி­கள் சிங்­கப்­பூர் வர, தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டோ­ருக்­கான பயண அனு­ம­தி­யைப் பெறு­வ­தற்­கான 'சேஃப் டிரா­வல்' இணை­யப் பக்­கம் நேற்று சில மணி­நே­ரம் முடங்­கி­யது.

மலே­சி­யா­வி­லி­ருந்து சிங்­கப்­பூர் வர விரும்­பு­வோ­ருக்­கான விண்­ணப்­பங்­கள் இன்று காலை தொடங்­கிய நிலை­யில், இணை­யப்­பக்­கம் முடங்­கி­யது.

நண்­ப­கல் வாக்­கில் அந்த இணை­யப் பக்­கம் முடங்­கி­ய­தாக நம்­பப்­ப­டு­கிறது. இணை­யப் பக்­கத்­தில் பரா­ம­ரிப்­புப் பணி­கள் நடப்பதாக அதில் குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­தது.

பிற்­ப­கல் 3 மணிக்கு அந்த இணை­யப்­பக்­கத்­திற்­குச் சென்று பார்த்­த­போது, அது மீண்­டும் செயல்­ப­டு­வது தெரிந்­தது. எனி­னும், ஒரே நேரத்­தில் அதி­க­மா­னோர் அந்த இணை­யப்­பக்­கத்தை நாடு­வ­தால், விண்­ணப்­பம் செய்ய முடி­யா­தோர் பிறகு மீண்­டும் முயற்சி செய்­யு­மாறு அறி­வு­றுத்­தப்­பட்­டது.

இது­கு­றித்து குடி­நு­ழைவு, சோத­னைச்­சா­வ­டி­ ஆணை­யத்தை ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளி­தழ் தொடர்பு ­கொண்­டது.

அதற்­குப் பதி­ல­ளித்த ஆணை­யம், "பொது­மக்­க­ளுக்கு ஏற்­பட்ட சிர­மத்­திற்­காக மன்­னிப்பு கேட்­டுக்­கொள்­கி­றோம். இணை­யப்­பக்­கத்தை வழக்க­நி­லைக்­குக் கொண்­டு­வர நாங்­கள் முற்­படும் வேளை­யில், பொது­மக்­க­ளின் புரி­தலை நாடு­ கிறோம்," என்றது.

மலே­சி­யா­வி­லி­ருந்து குறு­கி­ய­கால வரு­கை­யா­ளர்­களும் நீண்­ட­கால அனு­மதி அட்டை வைத்­தி­ருப்­போ­ரும் சிங்­கப்­பூர் வரு­வ­தற்­கான பயண அனு­மதி விண்­ணப்­பங்­கள் நேற்று காலை 10 மணிக்­குத் தொடங்­கின.

இந்­தியாவிலிருந்தும் இந்­தோ­னீ­சி­யா­வி­லி­ருந்தும் வரு­வோ­ருக்­கான விண்­ணப்­பங்­கள் நேற்று மாலை 6 மணிக்­குத் தொடங்­கின.

இணை­யப்­பக்­கத்­திற்கு வரு­வோர் எண்­ணிக்கை மேலும் அதி­க­ரிக்­கும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.