இந்த வாரத்தின் வெள்ளிக்கிழமைத் தொழுகையின்போது இங்குள்ள 20 பள்ளிவாசல்கள் கூடுதல் வழிபாட்டாளர்களை அனுமதிக்கும் என்று முயிஸ் அமைப்பு கூறியுள்ளது.
இந்தப் பள்ளிவாசல்களில் அமைக்கப்பட்டுள்ள ஒவ்வொரு பிரிவிலும் அதிகபட்சமாக 100 பேரை அனுமதிக்கத் திட்டமிடப்படுகிறது.
வாராந்திர தொற்று உயர்வு வகிதம் குறைந்துகொண்டு வருவதை அடுத்து, மற்ற பள்ளிவாசல்களிலும் இதேபோல பிரிவுவாரியாக 100 பேர் வரை அனுமதிக்க அவற்றுடன் பணியாற்றி வருவதாக முயிஸ் நேற்று தெரிவித்தது.
அதனுடன், பல பள்ளிவாசல்கள் அன்றாடத் தொழுகைகளின்போது 50க்கும் மேற்பட்ட வழிபாட்டாளர்களை அனுமதிக்கத் தொடங்கியுள்ளதாக அமைப்பு கூறியது.
அன்றாட தொழுகைகள், கூட்டுத்தொழுகைகள் ஆகியவற்றின்போது, பாதுகாப்பு இடைவெளி, குறைவான நேரம், கூடுதல் சுத்திகரிப்பு, தனித்தனி வாயில்கள் போன்ற நடவடிக்கைகள் தொடரும் என்றும் முயிஸ் தெரிவித்தது.