ஆசியான் நாடுகள் தடுப்பூசி போடுவதில் முன்னேறி வருகின்றன. இந்த நிலையில் சீனாவும் ஆசியானும் ஒன்று மற்றதற்கு எல்லைகளைப் படிப்படியாகத் திறக்க சேர்ந்து செயல்பட வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்துள்ளார்.
இருதரப்பிலும் தடுப்பூசி சான்றிதழ்களை அங்கீகரிப்பதற்கான மின்னிலக்க மற்றும் பாதுகாப்பான தீர்வுகளை உருவாக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
ேநற்று நடைபெற்ற ஆசியான்-சீனா சிறப்பு மாநாட்டில் பிரதமர் லீ பேசினார்.
சீனாவுடனான உறவை, விரிவான உத்திபூர்வமாக பங்காளித்துவ உறவாக மேம்படுத்தும் ஆசியானின் முயற்சிகளைப் பாராட்டிய திரு லீ, இதன் மூலம் இரு தரப்பிலும் பல்வேறு துறைகளில் ஆழமான ஒத்துழைப்பு ஏற்படும் என்றார்.
இது, பரஸ்பர நன்மைகளுக்கு வழி வகுக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.
சிவில் விமானப் போக்குவரத்து மற்றும் சுற்றுலாவை மேம்படுத்தும் விதமாக ஆசியான்-சீனா விமானப் போக்குவரத்து ஒப்பந்தத்தையும் ஆசியான்-சீனா தடையற்ற ஒப்பந்தத்தையும் ேமம்படுத்தும் வழிகளை நாடுகள் ஆராய வேண்டும் என்று திரு லீ மேலும் தெரிவித்தார்.
மெய்நிகர் வழியாக நடைபெற்ற மாநாட்டில் சீன அதிபர் ஸி ஜின்பிங்கும் கலந்துகொண்டார். ஆசியான்-சீனா கலந்துரையாடல் உறவின் 30வது ஆண்டைக் குறிக்கும் வகையில் இந்த மாநாடு நடை ெபற்றது.
ஒரு நாள் நிகழ்ச்சியில் நாடு களுக்கு இடையே உறவை மேலும் பலப்படுத்தும் வழிகள் குறித்து தலைவர்கள் ஆலோசனை நடத்தினர். வட்டார, அனைத்துலக வளர்ச்சி பற்றியும் அவர்கள் தங்களுடைய கருத்துகளைப் பரிமாறிக்கொண்டனர்.
"கொள்ளைநோய் சூழலிலும் ஆசியானும் சீனாவும் தொடர்ந்து உறவை வலுப்படுத்தி வந்தன. இதன் விளைவாக கடந்த ஆண்டு சீனாவின் முக்கிய பங்காளியாக ஆசியான் மாறியுள்ளது.
இருதரப்பு ஆண்டு வர்த்தகம் தற்போது 500 பில்லியன் யுஎஸ் டாலரை (S$681 பில்லியன்) எட்டியுள்ளது.
"தன்னைப்பேணித்தனம் அதிகரித்துள்ளபோதும் வட்டார விரிவான பொருளியல் பங்காளித்துவ வர்த்தக உடன்பாட்டில் ஆசியானும் சீனாவும் முன்னணி வகிக்கின்றன," என்று பிரதமர் லீ சொன்னார்.
கடந்த ஆண்டு நவம்பரில் கையெழுத்தான இந்த ஒப்பந்தம் ஜனவரி 1ஆம் தேதியிலிருந்து அமலுக்கு வருகிறது. இது, உலகின் ஆகப்பெரிய வர்த்தக உடன்பாடாகக் கருதப் படுகிறது. ஆசியானின் பத்து உறுப்பு நாடுகளைத் தவிர, சீனா, ஆஸ்திரேலியா, ஜப்பான், நியூ சிலாந்து, தென்கொரியா ஆகிய நாடுகள் இதில் அங்கம் வகிக்கின்றன.