ஆளே இல்லாமல் தானாகவே புல்வெட்டும் சாதனங்களை சாங்கி விமான நிலைய குழுமம் சோதித்து வருகிறது.
ஏழு இயந்திரங்கள் ஏற்கெனவே பயன்படுத்தப் பட்டு வருகின்றன. எதிர்காலத்தில் இந்த இயந்திரங்களைப் பயன்படுத்தி ஆயிரம் காற்பந்துத் திடலுக்குச் சமமான புல்வெளி பராமரிக்கப்படும் என்று குழுமம் தெரி வித்துள்ளது.
இந்நிலையில் புல்வெட்டும் சாதனங்களைப் பயன்படுத்து வதில் பல்வேறு பாதுகாப்புப் பிரச்சினைகள் ஆராயப்பட்டு வருவதாக குழுமத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். புல்தரையை முறையாகப் பராமரிப்பது விமான நிலையத்தின் பாதுகாப்புக்கு மிகவும் முக்கியம் என்று கூறிய அந்தப் பேச்சாளர், புல்ெவளி ஒட்ட வெட்டப் பட்டிருந்தால் பறவைகள் இரை தேடி வரும். இதனால் தரையில் இருக்கும் அல்லது வானத்தில் பறக்கும் விமானங்களுக்கு ஆபத்து ஏற்படலாம் என்று குறிப்பிட்டார்.