மூன்று பேருந்துப் பாதைகளில் மாற்றம்

எஸ்­பி­எஸ் டிரான்சிட் பேருந்­து­கள் 22, 65, 506 ஆகி­ய­வற்­றின் பாதை டிசம்­பர் 12ஆம் தேதி­யி­லி­ருந்து மாற்றப்­ப­டு­கிறது.

டவுன்­டௌன் ரயி­லுக்கு இணை­யாக சேவை வழங்கி வந்­த­தால் அவற்றின் பாதை மாற்­றப்­ப­டு­வ­தாக நேற்று வெளி­யிட்ட அறிக்­கை­யில் எஸ்­பி­எஸ் டிரான்­சிட் தெரி­வித்­தது.

மூன்று பேருந்­து­களில் பய­ணம் செய்த பய­ணி­களும் ரயில் சேவைக்கு மாறி­விட்­ட­தால் பய­ணி­ க­ளின் எண்­ணிக்கை குறைந்­து­விட்­ட­தா­க­வும் அது கூறி­யது.

அங் மோ கியோ, தெம்­ப­னிஸ் பேருந்து நிலை­யங்­க­ளுக்கு இடையே சேவை வழங்கி வந்த சேவை எண் 22, இனி அங் ேமா கியோ, யூனோஸ் பேருந்து நிலை­யங்­க­ளுக்கு இடையே சேவை­யாற்­றும்.

சேவை எண் 65 தெம்­ப­னிஸ், ஹார்­பர்­ஃபி­ரண்ட் பேருந்து நிலை­யங்­க­ளுக்கு இைடயே சேைவ வழங்­கி­னா­லும் தெம்­ப­னிஸ் அவென்யூ 1, அவென்யூ 5ல் பேருந்து நிறுத்து­ மி­டங்­களில் நிற்­காது, மாறாக தெம்­ப­னிஸ் அவென்யூ 4 வழி­யாக அது செல்­லும்.

சேவை எண் 506 இனி­மேல் கிழக்கு வட்­டா­ரங்­க­ளுக்கு சேவை வழங்­காது. ஜூரோங் ஈஸ்ட், சிராங்­கூன் பேருந்து நிலை­யங்­க­ளுக்கு இடையே அதன் புதிய பாதை அமை­யும். மேலும் புக்­கிட் பாத்ேதாக்­குக்­கும் தோ பாயோ­வுக்­கும் இடைப்­பட்ட தீவு விரை­வுச் சாலை வழி­யா­க­வும் பேருந்து சேவை எண் 506 செல்­லும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!