பொருள், சேவை விநியோகக் கட்டமைப்பைக் காக்கும் ஆய்வுகளில் $18 மில்லியன் முதலீடு

பொருள், சேவை விநியோகக் கட்டமைப்பைக் காக்கும் ஆய்வுகளில் $18 மில்லியன் முதலீடு

2 mins read
40e1cd65-a23b-4507-95b7-e9cf8c0b26af
-

ஆசி­ய பசி­பிக் தொழில்­துறை உரு­மாற்­றம் 2021 என்ற மூன்று நாள் நிகழ்ச்சி நேற்று சிங்­கப்­பூர் எக்ஸ்போ கண்காட்சி மையத்தில்­ தொடங்­கி­யது.

பொருள், சேவை விநி­யோ­கக் கட்­ட­மைப்பு 4.0 செயல்­திட்­டத்­தை­யொட்டி பல அறி­விப்­பு­கள் அதில் இடம்­பெற்­றன.

பொருள், சேவை விநி­யோ­கக் கட்­ட­மைப்பு தடை­ப­டா­மல் பாது­காப்­பு­டன் இருப்­பதை உறு­திப்­ப­டுத்த உத­வும் தொழில்­நுட்ப ஆய்­வு­களில் மேற்கொள்ளப்படும் $18 மில்­லி­யன் முத­லீடு பற்றி துணைப் பிர­த­மர் ஹெங் சுவீ கியட் நேற்று அறி­வித்­தார்.

பொருள், சேவை விநி­யோ­கத்­தில் எதிர்­கா­லத்­தில் பெரி­ய­ள­வில் தடை ஏற்­ப­டும்­போது சிறிய நிறு­வ­னங்­கள் பாதிப்­பில் இருந்து தப்­பித்­துக்­கொள்ள தொழில்­நுட்­பம் உத­வும்.

அத்­த­கைய சூழ்­நிலை ஏற்­ப­டு­வ­தற்கு முன்­பா­கவே அதுபோன்ற சூழல்களை நினைவுகூர்ந்து நிறு­வனங்­கள் பல­வற்­றைக் கற்­றுக்­கொள்ள முடி­யும்.

இதைச் சாத்­தி­ய­மாக்க உற்­பத்தி, விநி­யோகத் தொழில்­துறைக் கட்­ட­மைப்­பு­க­ளுக்கு தொழில்­நுட்­பத்­தை­யும் பங்­கா­ளித்­துவ ஏற்­பா­டு­க­ளை­யும் தந்து உத­வும் வகை­யில் நேற்று பல்­வேறு அறி­விப்­பு­கள் இடம்­பெற்­றன.

பொருள், சேவை விநி­யோ­கக் கட்­ட­மைப்பு 4.0 செயல்­திட்­டத்­தின்­படி, அடுத்த இரண்டு ஆண்­டு­களில் $18 மில்­லி­யன் முத­லீ­டு­கள் இடம்­பெ­றும்.

ஏ*ஸ்டார் அமைப்­பின் கீழ் வரும் அந்த முத­லீட்­டுக்கு சிங்­கப்­பூர் தேசிய பல்­க­லைக்­க­ழ­க­மும் தொழில்­நுட்ப, வடி­வ­மைப்பு பல்­க­லைக்­க­ழ­க­மும் ஆய்­வுப் பங்­கா­ளி­க­ளாக ஆத­ரவு அளிக்­கின்­றன.

நிறு­வ­னங்­க­ளின் தேவை­க­ளைப் பூர்த்தி செய்­வ­தற்கு உத­வும் மின்­னி­லக்க மற்­றும் தானி­யக்­கத் தீர்வு­களை உரு­வாக்­கு­வது அந்­தச் செயல்­திட்­டத்­தின் நோக்­கம்.

அதோடு மட்­டு­மின்றி தொழில்­நுட்­பத்­தைப் பயன்­ப­டுத்தி விநி­யோ­கக் கட்­ட­மைப்பை மீள்­தி­ற­னோ­டும் பாது­காப்­பு­டன் வைத்­தி­ருப்­ப­தும் அதன் நோக்­கம் என்று தெரி­விக்­கப்­பட்­டது.

இந்­தச் செயல்­திட்­டத்­தில் ஈடு­பட விண்­வெளி, மருந்­துத் துறை, துல்­லி­யப் பொரு­ளி­யல், கணி­னிச் சில்லு தொழில்­து­றை­க­ளைச் சேர்ந்த 50க்கும் மேற்­பட்ட நிறு­வ­னங்­கள் ஆர்­வம் தெரி­வித்­துள்­ளன.

இணை­யம் தொடர்­பி­லான உணர் கருவிகளை உரு­வாக்கு­வது, கிடங்­கு­களை விவே­க­மிக்­க­வை­யா­க­வும் தானி­யக்­க­ம­ய­மா­க­வும் ஆக்­கு­வது, ஜூரோங் புத்­தாக்க வட்டாரத்துக்கான மேம்­பாடு­கள் உள்­ளிட்ட பல­வும் நேற்று வெளி­யான அறி­விப்­பு­களில் உள்­ள­டங்­கும்.