எஸ்பிஎஸ் வழக்கிலிருந்து எம்.ரவி விடுவிப்பு

எஸ்பிஎஸ் வழக்கிலிருந்து எம்.ரவி விடுவிப்பு

2 mins read
288dc06d-d65c-416a-bbee-0467ed273637
-

எஸ்­பி­எஸ் டிரான்­சிட் மீது வழக்­குத் தொடர்ந்த 13 பேருந்து ஓட்­டு­நர்­கள் தங்­கள் வழக்­க­றி­ஞர் எம். ரவியை வழக்­கி­லி­ருந்து விலக்கியுள்ளனர்.

இந்த வழக்­கின் முதன்மை வாதி­யான திரு சுவா குவாங் மெங், நீதி­பதி ஆட்ரி லிம் மற்­றும் எஸ்­பி­எஸ் டிரான்­சிட்­டின் வழக்­க­றி­ஞர், மூத்த வழக்­க­றி­ஞர் தவிந்­தர் சிங் ஆகி­யோ­ரி­டம் திரு ரவி­யின் நடத்­தை­யால் ஓட்­டு­நர்­கள் மிக­வும் சங்­க­ட­ம­டைந்­துள்­ள­னர் என்று நேற்று முன்­தி­னம் நடந்த வழக்கு விசா­ர­ணை­யின்­போது வெளி­யிட்ட அறிக்­கை­யில் கூறி­னார்.

திரு ரவி, நீதி­பதி லிம் சார்­புடை­ய­வர் என்று குற்­றம் சாட்­டி­யி­ருந்­தார். மேலும் அவர் வழக்கை விசா­ரிப்­ப­தில் இருந்து தன்னை விலக்­கிக்­கொள்ள வேண்­டும் என்று கோரி­னார்.

அவர்­கள் நிர்­வாக விஷ­யங்­களைப் பற்றி விவா­திக்­கும்போது அவர் திரு சிங்கை "கோமாளி" என்­றும் அழைத்­தார். இந்த நட­வடிக்­கை­கள் காணொ­ளிச் சந்­திப்பு உரை­யா­டல் மூலம் நடை­பெற்­றது.

"திரு ரவி­யின் நடத்­தையை எங்­க­ளால் ஏற்­றுக்­கொள்ள முடி­ய­வில்லை. நேற்று அவர் நடந்து கொண்ட விதம் அவர் மீது நம்­பிக்கை வைத்­தி­ருந்த எங்­க­ளுக்கு பெரும் அதிர்ச்­சியை அளித்­தது. அவர் மீது நாங்­கள் வைத்த நம்­பிக்­கையை அவர் பாழ்­ப­டுத்தி விட்­டார். எங்­கள் வழக்­கின் போக்கை அவ­ரது நட­வ­டிக்கை பெரி­தும் பாதித்துவிட்­டது," என்று திரு சுவா தனது அறிக்­கை­யில் தெரி­வித்­துள்­ளார்.

ஓட்­டு­நர்­கள் இது­வரை திரு ரவிக்கு $55,000க்கும் மேல் பணம் செலுத்­தி­யுள்­ள­னர் என்­றும் அவர் கூறி­னார். இந்த பணம் பொது­மக்­கள் நன்­கொடை மூலம் திரட்­டப்­பட்­டது.

நேற்று முன்­தி­னம் நடந்த விசா­ர­ணை­யின்­போது, திரு ரவி நியா­ய­மான விசா­ர­ணைக்­கான உரிமையை மீறியதா­க­வும், அவர் மீதிருந்த நம்­பிக்கை குலைந்துவிட்டது என்­றும் மேலும், "இந்த சட்­ட வி­ரோத நட­வடிக்­கை­களில் ஓட்­டு­நர்­கள் பங்­கேற்க விரும்­ப­வில்லை," என்­றும் அவர் கூறி­னார்.

"சிங்­கப்­பூர் நீதித்­து­றை­யின் மீது எங்­க­ளுக்கு நம்­பிக்கை இல்லை என்­றும், வழக்­கைத் தொடர நாங்­கள் விரும்­ப­வில்லை என்­றும் திரு ரவி நேற்று கூறிய குற்­றச்­சாட்­டில் எந்த உண்­மை­யும் இல்லை," என்று திரு சுவா நேற்று கூறி­னார்.

பேருந்­து­ ஓட்டுநர்கள் நீதி­மன்­றத்­தில் வழக்­குத் தொடர உத்­தே­சித்­துள்­ள­தா­க­வும், தற்­போது புதிய வழக்­க­றி­ஞ­ரைத் தேடிக்கொண்­டி­ருப்­ப­தா­க­வும் திரு சுவா மேலும் கூறி­னார். கூடு­தல் நேர ஊதி­யம் மற்­றும் பணி நேரம் தொடர்­பாக பேருந்து ஒட்­டு­நர்­க­ளுக்­கும் பேருந்து நிறுவனத்துக்கும் இடையே தக­ராறு ஏற்­பட்­ட­தை­ய­டுத்து இந்த வழக்கு நடந்­தது.

உச்ச நீதி­மன்­றத்­திற்கு அனுப்­பிய கடி­தத்தை நேற்று முன்­தி­னம் ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் பார்த்­தது. திரு சுவா புதிய வழக்­க­றி­ஞர் நிய­மிக்­கப்­படும்வரை நட­வ­டிக்­கை­களை ஒத்­தி­வைக்­கு­மாறு கோரி­னார். நீதி­பதி லிம்­மின் வழக்­கி­லி­ருந்து தன்னை விலக்­கிக்­கொள்­வது தொடர்­பான எந்த விண்­ணப்­பத்­தை­யும் தொட­ரப்­போ­வ­தில்லை என்­றும் அவர் கூறி­னார்.

நவம்­பர் 29ஆம் தேதிக்­குள் வழக்கு தொடர்­பான அனைத்து தொடர்­பு­டைய ஆவ­ணங்­க­ளை­யும் மற்­றும் பணம் செலுத்­தி­ய­தற்­கான முழு அறிக்­கை­யை­யும் ஒப்­ப­டைக்கு­மாறு திரு ரவி­யி­டம் திரு சுவா கேட்­டுக் கொண்­டுள்­ளார்.

"இந்த விவ­கா­ரம் தொடர்­பாக வழக்கறிஞர் சங்­கத்­தில் புகார் அளிக்க எனக்கு உரிமை உள்­ளது," என்று திரு ரவிக்கு எழு­திய கடி­தத்­தில் திரு சுவா கூறி­னார்.