மெக்டானல்ட்ஸ் கட்டணச் சேவைக்கு இடையூறு

1 mins read
f0c4d00a-9efb-450c-8bf3-b06deac3ad9d
பின்னர் இரவு 7.30 மணியளவில் மெக்டானல்ட்ஸ் வெளியிட்ட மற்றொரு ஃபேஸ்புக் பதிவில், கட்டணச் சேவையில் ஏற்பட்ட இடையூறு சரிசெய்யப்பட்டுவிட்டதாகத் தெரிவித்தது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

மெக்டானல்ட்ஸ் உணவகங்களில் தாங்கள் வாங்கிய உணவுக்கு விசா மற்றும் மாஸ்டர்கார்ட் அட்டையைக் கொண்டு இன்று புதன்கிழமை மாலை (நவம்பர் 24) வாடிக்கையாளர்களால் கட்டணம் செலுத்த முடியவில்லை.

ஏறக்குறைய ஒரு மணிநேரம் கட்டணச் சேவைகளுக்கு ஏற்பட்ட தடையே அதற்குக் காரணம்.

விசா மற்றும் மாஸ்டர்கார்ட் பரிவர்த்தனைகள் தொடர்பில் கட்டணச் சேவையில் இடையூறு ஏற்பட்டதாக அந்நிறுவனம் மாலை 6.18 மணிக்கு அதன் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டது.

மெக்டானல்ட்ஸ் இணையப்பக்கம் அல்லது கைபேசிச் செயலி மூலம் உணவு வாங்கும் வாடிக்கையாளர்கள், 'அமெரிக்கன் எக்ஸ்பிரஸ்', 'பேய்லா' அல்லது 'கிராப்பே' உள்ளிட்ட மாற்று கட்டண முறையைப் பயன்படுத்துமாறு வாடிக்கையாளர்களுக்கு மெக்டானல்ட்ஸ் நிறுவனம் அறிவுறுத்தியது.

பின்னர் இரவு 7.30 மணியளவில் மெக்டானல்ட்ஸ் வெளியிட்ட மற்றொரு ஃபேஸ்புக் பதிவில், கட்டணச் சேவையில் ஏற்பட்ட இடையூறு சரிசெய்யப்பட்டுவிட்டதாகத் தெரிவித்தது.