இல்லத்தில் குணமடையும் திட்டம் மீண்டும் சுகாதார அமைச்சிடம் ஒப்படைக்கப்படும்

கொவிட்-19 கிரு­மித் தொற்­றி­லி­ருந்து வீட்­டில் குண­ம­டை­யும் திட்­டத்­தின் நிர்­வா­கத்தை சிங்­கப்­பூர் ஆயு­தப் படை­கள் சுகா­தார அமைச்­சி­டம் ஒப்­ப­டைக்­க­வி­ருக்­கிறது.

தற்­காப்பு அமைச்­சர் இங் எங் ஹென் நேற்று தமது ஃபேஸ்புக் பக்­கத்­தில் இதைத் தெரி­வித்­தார்.

ஆனால் திட்­டத்­தின் நிர்­வா­கம் எப்­போது சுகா­தார அமைச்­சி­டம் ஒப்­ப­டைக்­கப்­படும் என்று அவர் குறிப்­பி­ட­வில்லை.

அறி­கு­றி­கள் இல்­லாத அல்­லது இலே­சான அறி­கு­றி­கள் உள்ள நோயா­ளி­கள் பெரும்­பா­லா­ன­வர்­கள் இத்­திட்­டத்­தின்­கீழ் வீட்­டில் இருந்­த­படி குண­ம­டைந்து வரு­கி­றார்­கள். இவர்­க­ளுக்­கான பாரா­ம­ரிப்பு வழி­காட்­டு­தலை சிங்­கப்­பூர் ஆயு­தப் படை­கள் குழு வழங்கி வரு­கிறது.

திட்­டத்தை நிர்­வ­கிக்­கும்­படி பணிக்­கப்­பட்ட சிங்­கப்­பூர் ஆயு­தப்­ப­டைத் தலை­வர்­களும் மற்ற படை­யி­ன­ரும் சிறப்­பாக செயல்­பட்­டுள்­ள­தாக டாக்­டர் இங் நேற்று கூறி­னார்.

அவர்­கள் நடை­மு­றை­க­ளைச் சீர­மைத்து, மின்­னி­யல் தீர்­வு­களை அறி­மு­கப்­ப­டுத்­தி­னார்­கள். கொவிட்-19 கிருமி தொற்­றிய வெவ்­வேறு பிரி­வு­க­ளைச் சேர்ந்த குடி­யி­ருப்­பா­ளர்­க­ளுக்­குச் சரி­யான பரா­ம­ரிப்பு கிடைப்­பதை அவர்­கள் உறு­தி­செய்­தார்­கள்.

திட்­டம் இப்­போது சீராக நடந்­து­கொண்­டி­ருப்­ப­தால், சுகா­தார அமைச்­சி­டம் இதைத் திரும்ப ஒப்­ ப­டைக்க இது நல்ல நேரம் என்று டாக்­டர் இங் குறிப்­பிட்­டார்.

வீட்­டில் இருந்­த­படி குண­ம­டை­யும் திட்­டத்­தில் சுமூ­க­மாய் இருப்­பதை உறு­தி­செய்ய, சிங்­கப்­பூர் ஆயு­தப் படை­க­ளைச் சேர்ந்த ஆலோ­ச­கர்­கள் தொடர்ந்து அத்­திட்­டத்­தில் பணி­யாற்­று­வார்­கள் என்­றும் டாக்­டர் இங் கூறி­னார்.

வீட்­டில் இருந்­த­படி குண­ம­டை­யும் முன்­னோ­டித் திட்­டம் சென்ற ஆகஸ்ட் 30ஆம் தேதி தொடங்­கப்­பட்­டது. ஆனால் தங்­கள் சூழ்­ நிலைக்குத் தகுந்த சரி­யான ஆலோ­ச­னை­யைப் பெற தங்­க­ளால் சுகா­தார அமைச்­சைத் தொடர்­பு­கொள்ள முடி­ய­வில்லை என்­றும் அடுத்து என்ன செய்­வது என்று தெரி­ய­வில்லை என்று பொது­மக்­களில் பலர் புகார் தெரிவித்தனர்.

இதை­ய­டுத்து, திட்­டத்­துக்கு உதவ சிங்­கப்­பூர் ஆயு­தப் படை­கள் வீட்­டில் குண­ம­டை­யும் திட்­டத்­துக்­கான பணிக்­கு­ழுவை அமைத்­தது.

சிங்­கப்­பூர் ரா­ணு­வம், சிங்­கப்­பூர் கடற்­படை, சிங்­கப்­பூர் ஆகா­யப்­படை ஆகி­ய­வற்­றைச் சேர்ந்த 450க்கும் அதி­க­மா­ன­வர்­கள் திட்­டத்­தில் பங்­கெ­டுத்­த­தாக தற்­காப்பு அமைச்­சர் தெரி­வித்­தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!