தாவரப் புரத உணவுப் பொருட்களைத் தயாரிக்கும் முதல் பெரிய தானியங்கி உற்பத்திக் கூடம்

தாவரப் புரத உணவுப் பொருட்களைத் தயாரிக்கும் முதல் பெரிய தானியங்கி உற்பத்திக் கூடம்

1 mins read
9782753d-b517-48e8-aa14-ede3f0e58f07
புதிய நிலையம் தாவரங்களைக் கொண்டு உற்பத்தி செய்யும் இறைச்சி போன்ற புரதப் பொருட்களை உலக நாடுகளுக்கு விநியோகிக்கத் திட்டமிடுகிறது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

தாவ­ரங்­க­ளைக் கொண்டு தயா­ரிக்­கப்­படும் இறைச்­சி போன்ற புரத உணவுப் பொருட்­களை உற்­பத்தி செய்­வ­தற்­கான முதல் பெரிய, தானி­யங்கி உற்­பத்தி நிலை­யம் நேற்று தொடங்­கப்­பட்­டுள்­ளது.

'குரோத்­வெல் ஃபுட்ஸ்' எனும் நிறு­வ­னம் அந்த நிலை­யத்தை நடத்­து­கிறது. அந்த உள்­ளூர் நிறு­வ­னம் இதை நடத்­து­கிறது.

தாவ­ரங்­க­ளைக் கொண்டு உற்­பத்தி செய்­யும் இறைச்சி போன்ற புர­தப் பொருட்­களை உல­க ­நாடு களுக்கு விநி­யோ­கிக்க நிறு­வ­னம் திட்­ட­மி­டு­கிறது.

புதிய நிலை­யம் 'ஜேடிசி ஃபுட்ஹப் செனோக்கோ'வில் அமைந்­துள்­ளது. இந்த ஏழு மாடிக் கட்­ட­டம், சிங்­கப்­பூ­ரில் உண­வுப் புத்­தாக்­கத்­துக்­காக மட்­டும் கட்­டப்­பட்­டுள்­ளது.

உற்­பத்தி நிலை­யம், ஓராண்­டில் 4,000 மெட்­ரிக் டன் எடை­யுள்ள தாவ­ரப் புரத உண­வு­க­ளைத் தயா­ரிக்க வல்­லது. ஆண்­டுக்கு 1,600க்கும் அதி­க­மா­ண­வர்­க­ளுக்­குத் தேவை­யான உணவு இது.

மேலும் சிங்­கப்­பூ­ரின் உண­வுப் பாது­காப்­புக்­கும் புதிய உற்­பத்தி நிலை­யம் பங்­க­ளிக்­கும். வரும் 2030ஆம் ஆண்­டுக்­குள் சிங்­கப்­பூ­ரின் சத்­து­ண­வுத் தேவை­களில் 30 விழுக்­காட்டை அந்த தொழிற்­சா­லை­யால் தயா­ரிக்க முடி­யும்.

நிலை­யத்­தில் உள்ள சிறப்­புச் சாத­னங்­க­ளுக்­காக தெமா­செக் நிறு­வ­னம் குரோத்­வெல் ஃபுட்ஸ் நிறு­வ­னத்­துக்கு கணி­ச­மான நிதியை வழங்­கி­யுள்­ளது.

இறைச்­சி­யைப் போன்ற அதே சுவை­யும் தோற்­ற­மும் இருப்­பதை உறுதிசெய்ய அந்த இயந்­தி­ரங்­கள் பயன்­ப­டு­கின்­றன.