கல்வித் துறையில் பல்லாண்டு காலமாகப் பின்பற்றப்பட்டு வந்த டி-ஸ்கோர் முறை முடிவுக்கு வந்துவிட்டது. அதற்குப் பதிலாக புதிய மதிப்பீட்டு முறை நடப்புக்கு வந்துள்ளது. அதன்படி இவ்வாண்டு பிஎஸ்எல்இ தேர்வு புதிய மதிப்பீட்டு முறையில் நடைபெற்றுள்ளது. இந்தப் புதிய முறை மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் நிம்மதியைத் தந்துள்ளதாகக் கூறப்பட்டாலும் எல்லோருக்கும் அவ்வாறு இல்லை எனத் தெரிய வந்துள்ளது. "என்னதான் மதிப்பீட்டு முறையை மாற்றினாலும் முழுமையான பிஎஸ்எல்இ தேர்வு முறை அப்படியே உள்ளது. 200க்கு மேல் மதிப்பெண் பெறுவதற்குப் பதிலாக 1 முதல் 20 வரை என மதிப்புப் புள்ளிகளை தற்போது எதிர்பார்க்கிறோம். அவ்வளவுதான்," என்றார் தொடக்கநிலை 6 படிக்கும் மாணவர் ஒருவரின் தந்தை. அதேநேரம் புதிய மதிப்பீட்டு முறையால் மதிப்பெண் பற்றி பிள்ளைகள் கவலைப்பட வேண்டியதில்லை என டேரில் கூ, 42, என்னும் தந்தை ஒருவர் கூறினார்.
புதிய மதிப்பீட்டு முறை குறித்து பெற்றோர் கருத்து
1 mins read
-

