மவுண்ட் பிளசண்ட் வீடுகளுக்கு வலுவான தேவை இருக்கும்
மவுண்ட் பிளசண்ட்டில் கட்டப்பட இருக்கும் வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகளுக்கு வலுவான தேவை இருக்கும் என சொத்துச் சந்தை பகுப்பாய்வாளர்கள் கணித்து உள்ளனர். மத்திய வட்டாரம், அருகில் எம்ஆர்டி நிலையம், சுற்றி உள்ள துணை நகர்களில் அமைந்துள்ள வசதிகள் ஆகியவற்றின் அடிப்படையில் தேவை வலுவாகக் காணப்படும் என்கின்றனர் அவர்கள். இதனால் அங்கு அமையவிருக்கும் வீடுகளின் விலை முதிர்ச்சியடைந்த பேட்டைகளில் உள்ளதைப்போல, குறிப்பாக, மவுண்ட் பிளசண்ட் அருகில் இருக்கும் வீடுகளின் விலைகளை ஒத்து இருக்கலாம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். மவுண்ட் பிளசண்ட் வட்டாரத்தில் முன்னாள் காவல்துறை கல்விக் கழகத் தளத்தில் புதிதாக 5,000 வீடுகளுடன் பொது வீடமைப்புப் பேட்டை உருவாக்கப்படும் எள தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ கூறியிருந்தார். அடுத்த ஐந்தாண்டுகளில் அந்த வட்டாரத்தில் தொடங்கப்பட இருக்கும் முதல் பிடிஓ திட்டமாக அது அமையும். இந்தப் புதிய பேட்டை 33 ஹெக்டர் பரப்பளவில், அதாவது பிடாடாரி தளத்தின் மூன்றில் ஒரு பகுதியில் புதிய வீடுகள் கட்டப்படும். தாம்சன் ரோடு, தீவு விரைவுச்சாலை போன்றவை அதன் சுற்றுவட்டாரத்தில் இருக்கும். மேலும் முதிர்ச்சியடைந்த தோ பாயோ நகருக்கு அருகில் இது அமையும்.
தாம்சன் ஈஸ்ட் கோஸ்ட் எம்ஆர்டி தடத்திலுள்ள மவுண்ட் பிளசண்ட் எம்ஆர்டி நிலையம் இந்தப் பகுதிக்கு வசதி தரும். இவ்வாண்டு பிப்ரவரியில் பிடாடாரியில் தொடங்கப்பட்ட ஐந்தறை வீட்டின் தொடக்க விலை $611,000 ஆக இருந்தது. அதேநேரம் நான்கறை வீட்டின் விலை $464,000ல் தொடங்கியது. கடந்த பிப்ரவரியில்
தோ பாயோ நான்கறை பிடிஓ வீட்டின் விலை $400,000ல் தொடங்கி $666,000 வரை சென்றது.
ஐடிஇ மாணவர்களுக்கு உதவ
நீ ஆன் கோங்ஸி $1 மி. நன்கொடை
ஐடிஇ எனப்படும் ெதாழில்நுட்பக் கல்விக் கழகத்தில் பயிலும் வசதிகுறைந்த மாணவர்கள் புதிய $1 மில்லியன் நன்கொடை மூலம் அதிக நிதி உதவிபெற உள்ளனர். நீ ஆன் கோங்ஸி அறநிறுவனம் நேற்று இதைத் தெரிவித்தது. இந்த நன்கொடை தொகை 2022 முதல் ஐந்தாண்டுகளுக்கு மாணவர்களுக்கு அளிக்கப்படும். இதன் மூலம் 222 மாண வர்கள் பலனடைவர் என்று ஐடிஇ தெரிவித்தது. அன்றாட உணவு, பயணச் செலவு மற்றும் கற்றல் பொருள்களுக்காக மாதந்தோறும் $150 ஒவ்வொரு மாணவருக்கும் வழங்கப். படும். தனிநபர் வருமானம் $690க்கு மிகாத ஒட்டுமொத்த குடும்ப வருமானம் $2,750க்கு மேல் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்த நைடெக் அல்லது ஹயர் நைடெக் படிக்கும் முழுநேர மாணவர்கள் இந்த நிதி உதவிக்கு விண்ணப்பிக்கலாம். நன்னடத்தையுடன் படிப்பில் ஆர்வத்துடன் விளங்குபவராக வும் மாணவர்கள் இருத்தல் அவசியம்.

