மளிகைக் கடைகளுக்கு ஆதரவுக்கரம் நீட்டும் மின்னிலக்கக் கூடங்கள்

மளி­கைக்­ க­டை­க­ளுக்கு உத­வும் வகை­யில் அவை விற்கும் பொருட்­கள் வாடிக்­கை­யா­ளர்­க­ளைச் சென்­ற­டைய 11 தானி­யங்கி மின்­னி­லக்­கக் கூடங்­கள் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன.

இந்த மின்­னி­லக்­கக் கூடங்­கள் புக்­கிட் கொம்­பாக், கிள­மெண்டி ஆகிய வட்­டா­ரங்­களில் உள்ள வீட­மைப்பு வளர்ச்­சிக் கழ­கக் குடி

­யி­ருப்­புக் கட்­ட­டங்­களில் வைக்­கப்­பட்­டுள்­ளன.

இந்த அறி­மு­கத் திட்­டம் ஓராண்­டுக்கு நடத்­தப்­படும். இத்­திட்­டத்தை என்­டர்­பி­ரைஸ் சிங்­கப்­பூர் அமைப்பு, வீட­மைப்பு வளர்ச்­சிக் கழ­கம், சிங்­கப்­பூர் வர்த்­த­கர்­கள் சங்க சம்­மே­ள­னம் ஆகி­யவை நேற்று தொடங்­கி­வைத்­தன.

குடி­யி­ருப்­புப் பேட்­டை­களை மின்­னி­லக்­க­ம­ய­மாக்­கும், மீண்­டும் உயிர்ப்­பிக்­கும் குழு­ மேற்­கொண்டு வரும் முயற்­சி­களில் இந்த அறி­மு­கம் திட்­ட­மும் ஒன்று.

அறி­மு­கத் திட்­டத்­தில் சேர்ந்த மளி­கைக் ­க­டை­களில் புக்­கிட் கொம்­பாக் வட்­டா­ரத்­தில் உள்ள குவான் மீட் என்­டர்­பி­ரைஸ் மளி­கைக்­க­டை­யும் ஒன்று.

புக்­கிட் பாத்­தோக் வெஸ்ட் அவென்யூ 5 புளோக் 390ல் மூன்று மின்­னி­லக்­கக் கூடங்­க­ளி­லும் புக்­கிட் பாத்­தோக் வெஸ்ட் அவென்யூ 5 புளோக் 384ல் உள்ள நான்கு மின்­னி­லக்­கக் கூடங்­க­ளி­லும் தனது மளி­கைப்­ பொ­ருட்­களை அது அடுக்கி வைத்­துள்­ளது.

கிள­மெண்டி அவென்யூ 4 புளோக் 312ஏ குடி­யி­ருப்­புக் கட்­ட­டத்­தில் கீ குவான் ஹுவாட் பேரங்­காடி அடுக்கி வைத்­தி­ருக்­கும்

மளி­கைப்­ பொ­ருட்­க­ளைக் கொண்ட நான்கு மின்­னி­லக்­கக் கூடங்­கள் உள்­ளன.

மின்­னி­லக்­கக் கூடங்­கள் அனைத்­தும் குடி­யி­ருப்­புக் கட்­ட­டங்­களில் தரைத்­த­ளத்­தில் வைக்­கப்­பட்­டுள்­ளன. அவை 24 மணி நேரம் இயங்­கும். சில மின்­னி­லக்­கப் பெட்­டி­கள் குளிர்­ப­தன வச­தி­யைக் கொண்­டவை.

அன்­றா­டப் பயன்­பாட்­டுக்­குத் தேவை­யான பொருட்­களை அவற்­றில் அடுக்கி வைக்­கப்­பட்­டுள்­ளன. சமை­ய­லுக்­குத் தேவை­யான பொருட்­கள், சலவைக்குப் பயன்

­ப­டுத்­தப்­படும் சவர்க்­கா­ரம் போன்­றவை மின்­னி­லக்­கக் கூடங்­களில் அடுக்கி வைக்­கப்­பட்­டுள்­ளன.

மின்­னி­லக்­கக் கூடங்­களில் உள்ள பொருட்­களை வாங்க விரும்பு­வோர் முத­லில் பதிவு

செய்­து­கொள்ள வேண்­டும்.

கடன் அட்­டை­யைப் பயன்­ப­டுத்தி அவர்­கள் பொருட்­களை வாங்­க­லாம். பொருட்­களை வாங்க விரும்­பு­வோர் கியூ­ஆர் குறி­யீட்டை ஸ்கேன் செய்ய வேண்­டும். கியூ­ஆர் குறி­யீட்டை ஸ்கேன் செய்து மின்­னி­லக்­கக் கூடங்­க­ளைத் திறக்­க­லாம்.

மின்­னி­லக்­கக் கூடங்­க­ளி­லி­ருந்து வெளியே எடுக்­கப்­படும் பொருட்­களை செயற்கை நுண்­ண­றிவு கேமரா தொழில்­நுட்­பம் கண்­கா­ணிக்­கும்.

பொருட்­களை எடுத்­து­விட்டு மின்­னி­லக்­கக் கூடங்­க­ளின் கதவை மூடி பூட்­டி­ய­தும் அவற்­றின் விலை கடன் அட்­டைக் கணக்­கில்

பதி­வா­கி­வி­டும்.

குடி­யி­ருப்­புப் பேட்­டை­களை மின்­னி­லக்­க­ம­ய­மாக்­கு­தல், மீண்­டும் உயிர்ப்­பிக்­கும் குழு­வுக்­குத் தலைமை தாங்­கும் வர்த்­தக, தொழில் துணை அமைச்­சர் லோ யென் லிங்­கும் தேசிய வளர்ச்சி மூத்த துணை அமைச்­சர் சிம் ஆன்­னும் திட்­டத்­தின் அறி­முக விழா­வில் நேற்று கலந்­து­கொண்­ட­னர்.

மின்­னி­லக்க அணு­கு­மு­றையை விரி­வு­ப­டுத்த விழை­யும் குடி­யி­ருப்­புப் பேட்டை வர்த்­த­கர்­க­ளுக்கு இக்­குழு ஆத­ர­வுக்­க­ரம் நீட்­டு­கிறது.

"மின்­னி­லக்­க­ம­ய­மா­தல் என்று சொல்­லும்­போது அதை வெறும் மின்­வர்த்­த­கம் என்று பலர் நினைக்­கின்­ற­னர். ஆனால் இத்­த­கைய புத்­தாக்­க­மிக்க புதிய திட்­டங்­கள் மூல­மா­க­வும் மின்­னி­லக்க

அணு­கு­மு­றைக்கு மாற­லாம். அதே சம­யத்­தில் பய­னீட்­டா­ளர்­க­ளின் மாறி­வ­ரும் தேவை­க­ளுக்கு ஏற்ப வர்த்­த­கம் செய்­ய­லாம்.

"வய­தா­கு­கிறது என்­றும்

முன்­பு­போல நாளுக்கு 12 மணி நேரம் வர்த்­த­கம் செய்ய முடி­ய­வில்லை என்று பெரும்­பா­லான மளி­கைக்­கடை உரி­மை­யா­ளர்­கள் தெரி­விக்­கின்­ற­னர்.

"இத­னால் தங்­க­ளுக்­குக் கிடைக்­கும் வரு­மா­னம் குறை­யக்­கூ­டும் என்­றும் வாடிக்­கை­யா­ளர்­களை அவர்­கள் இழக்­கக்­கூ­டும் என்­றும் அவர்­களில் பலர் கவ­லைப்­

ப­டு­கின்­ற­னர்.

"வீட­மைப்பு வளர்ச்­சிக் கழ­கக் குடி­யி­ருப்­புப் பேட்­டை­களில் உள்ள கடை­கள் அவற்­றின் வாடிக்­கை­யா­ளர்­க­ளைச் சென்­ற­டை­ய­வும் வர்த்­தக வாய்ப்பை அதி­க­ரிக்­க­வும் தற்­போது இயங்­கி­வ­ரும் மளி­கைக்­

க­டை­க­ளுக்கு ஈடான ஓர் ஏற்­பாட்­டை­யும் செய்து தர இந்த மின்­னி­லக்­கக் கூடங்­கள் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன," என்று திரு­வாட்டி லோ தெரி­வித்­தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!