சிங்கப்பூர் தேசிய காட்சிக்கூடத்தில்
காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள தொழில்நுட்ப மாதிரிகளில் இயந்திர மனித சுற்றுலா வழிகாட்டியும் திசைகாட்ட உதவும் 'சாட்போட்' சாதனமும் அடங்கும்.
காட்சிக்கூடத்தில் உள்ள 'ஒய்-லேப் ஷோகேஸ்' பகுதியில் இவைபோன்ற பல தொழில்நுட்ப மாதிரிகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. 'ஒய்-லேப் ஷோகேஸ்' பொதுமக்களுக்கு நேற்று அதிகாரபூர்வமாகத் திறந்துவிடப்பட்டது.
காட்சிக்கூடம் அண்மையில் பங்காளித்துவம் உடன்படிக்கை செய்துகொண்ட தனிநபர்களாலும் அமைப்புகளாலும் இந்தத் தொழில்நுட்ப மாதிரிகள் வடிவமைக்கப்
பட்டுள்ளன.
காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள தொழில்நுட்ப மாதிரிகள் ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கு மாற்றப்படும். தற்போது காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள 11 தொழில்நுட்ப மாதிரி களில் 'டெமி' என்று பெயரிடப்பட்டுள்ள இயந்திர மனிதன், காட்சிக்கூடத்துக்கு வருபவர்களுக்கு வழிகாட்டியாகச் செயல்
படுகிறது. அமைப்புகள், தனிநபர்கள் வடிவமைத்துள்ள தொழில்நுட்ப மாதிரிகளை அறிமுகப்படுத்துவதே இந்தப் புத்தாக்கமிக்க ஒய்-லேப்பின் இலக்கு. கலைகள், தொழில்நுட்பம் தொடர்பான புதிய நிறுவனங்கள் திட்டத்தையும் காட்சிக்கூடம் நேற்று அறிமுகப்படுத்தியது.
தொழில்நுட்ப மாதிரிகளை வடிவமைக்க விரும்புவோர் அதற்கு விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படும் குழுக்களுக்குத் தலா $5,000 மானியம் வழங்கப்படும்.