ஹவ்காங் தீச்சம்பவம்; ஐவருக்கு மூச்சுத்திணறல்

ஹவ்காங் தீச்சம்பவம்; ஐவருக்கு மூச்சுத்திணறல்

1 mins read
9319a9b5-872b-418c-8d9a-fd05f5dd2c42
வீட்டின் சமையலறையில் தீ மூண்டது. மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் ஐவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். படங்கள்: சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை, ஷின் மின் -

ஹவ்­காங் வட்­டா­ரத்­தில் உள்ள வீடு ஒன்­றில் நேற்று முன்­தி­னம் தீச்­சம்­ப­வம் ஏற்­பட்­டதை அடுத்து, புகையை சுவா­சித்த ஐவ­ருக்கு முச்­சுத்­தி­ண­றல் ஏற்­பட்­டது. அவர்­கள் மருத்­து­வ­ம­னைக்குக் கொண்டு செல்­லப்­பட்­ட­னர்.

நேற்று முன்­தி­னம் மாலை 5.45 மணி அள­வில் ஹவ்­காங் ஸ்தி­ரீட் 52 புளோக் 537ல் இரண்­டா­வது மாடி­யில் உள்ள ஒரு வீடு தீப்­பி­டித்து எரிந்­த­தாக தக­வல் கிடைத்­தது என்று சிங்­கப்­பூர் குடி­மைத் தற்­காப்­புப் படை தெரி­வித்­தது. வீட்­டில் சமை­ய­லறை

தீப்­பி­டித்­துக்­கொண்­ட­தாக தெரி­விக்­கப்­பட்­டது.

சம்­ப­வம் நிகழ்ந்த இடத்தை அதி­கா­ரி­கள் அடைந்­த­போது வீடு தீப்­பி­டித்து எரிந்­து­கொண்­டி­ருந்­தது. சுவாச உத­விக் கரு­வி­களை அணிந்­து­கொண்டு அதி­கா­ரி­கள் தீப்­பற்றி எரிந்­து­கொண்­டி­ருந்த அந்த வீட்­டிற்­குள் சென்று தீயை அணைத்­த­னர்.

குடி­மைத் தற்­காப்பு அதி­கா­ரி­கள் சம்­பவ இடத்தை அடைவதற்கு முன்பு பாதிக்­கப்­பட்ட வீட்­டின் மேல் மாடி­களில் உள்ள வீடு­களில் வசிக்­கும் ஏறத்­தாழ 20 குடி­யி­ருப்­பா­ளர்­கள் அங்­கி­ருந்து பத்­தி­ர­மாக வெளி­யேற்­றப்­பட்­ட­னர்.

"குடி­யி­ருப்­பா­ளர்­கள் படிக்­கட்­டு­கள் வாயி­லாக வெளி­யேற்­றப்­பட்­ட­னர். தீப்­பற்றி எரிந்­து­கொண்­டி­ருந்த வீட்­டிற்கு அரு­கில் இருந்­த­போது புகை கார­ண­மாக ஐவ­ருக்கு மூச்­சுத்­தி­ண­றல் ஏற்­பட்­டது," என்று குடி­மைத் தற்­காப்­புப் படை தெரி­வித்­தது.

பாதிக்­கப்­பட்ட ஐவர் சிங்­கப்­பூர் பொது மருத்­து­வ­ம­னைக்­கும் தேசிய பல்­க­லைக்­க­ழக மருத்­து­வ­ம­னைக்­கும் கொண்டு செல்­லப்­பட்­ட­னர்.

வீட்­டில் தீ மூண்­ட­தற்­கான கார­ணத்­தைக் கண்­ட­றிய குடி­மைத் தற்­காப்­புப் படை அதி­கா­ரி­கள் விசா­ரணை நடத்­து­கின்­ற­னர்.