தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

போதைப் பொருள் குற்றங்கள் - மூன்று மலேசிய இந்தியர்களின் மேல் முறையீடு நிராகரிப்பு

1 mins read
a507d040-2487-44af-b1e9-cb60be9317e6
-

மலேசியர்களான கமல்நாதன் முனியாண்டி, 27, சந்துரு சுப்பிரமணியம், 57, இருவருக்கும் சிங்கப்பூரின் உச்ச நீதிமன்றம் மரண தண்டனைகளை உறுதி செய்துள்ளது. குறைந்தது 1.34 கிலோகிராம் போதைமிகு அபினைக் கடத்திய குற்றத்திற்காக இருவருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது. மேலும், இச்சம்பவத்துடன் தொடர்புடை மலேசியரான 26 வயது பிரவினாஷ் சந்திரனுக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையையும் 15 பிரம்படிகளையும் நீதிமன்றம் உறுதிசெய்தது. இந்த வழக்கில் மூவரது மேல்முறையீட்டையும் உச்ச நீதிமன்றம் நிராகரித்துவிட்டது. பிரவினாஷ், போதைப்பொருளைக் கடத்தியதாகவும் பிறகு அவர் அத்தகையை கடத்தல்களுக்கு உதவியதாகவும் அரசுதரப்பு வழக்கறிஞர்கள் தெரிவிர்ததனர்.

உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடி மூலமாக கமலநாதனும் பிரவினாஷும் சிங்கப்பூருக்கு வந்தனர். கிராஞ்சி எம்ஆர்டி நிலையத்தை இவர்கள் அடைந்தபோது பிரவினாஷின் தோள் பையில் போதைப் பொருட்கள் வைக்கப்பட்டன. பிறகு அவர்கள் அருகிலுள்ள காப்பிக் கடையில் சுரேன் என்பவரைச் சந்தித்த பிறகு கிராஞ்சி ரோட்டுக்குச் சென்று சந்துருவைத் தொடர்புகொண்டனர். அவ்விருவருக்கும் சந்துரு பணத்தையும் காலியான பிளாஸ்டிக் பைகளையும் தந்தார்.

அவர்கள் அங்கிருந்து தனித்தனியாகப் பிரிந்து சென்ற சிறிது நேரத்தில் போதைப்பொருள் அதிகாரிகளிடம் பிடிப்பட்டனர். போதைப்பொருள் பிரவினாஷின் தோள் பையில் கண்டுபிடிக்கப்பட்டன.