சிங்கப்பூரின் உயரிய கலாசார பதக்கம்: காட்சி வழி வரலாறு

கலை, இலக்­கி­யத்­துக்­கான சிங்­கப்­பூ­ரின் ஆக உய­ரிய விரு­தான கலா­சா­ரப் பதக்­கத்­தைப் பெற்ற சிங்­கப்­பூ­ரின் 130 மதிப்­புக்­கு­ரிய கலை­ஞர்­கள், எழுத்­தா­ளர்­கள் பற்­றிய கண்­காட்சி தி ஆர்ட்ஸ் ஹவு­ஸில் இடம்­பெற்­றுள்­ளது.

"எங்­கள் கலா­சார பதக்­கத்­தின் கதை" என்ற இக்­கண்­காட்­சியை கலா­சார, சமூ­க, இளை­யர் அமைச்­சர் எட்­வின் டோங் நேற்று அதி­கா­ர­பூர்­வ­மா­கத் தொடங்கி வைத்­தார்.

ஆர்ட்ஸ் ஹவு­சின் தரைத் தளத்­தில் இடம்­பெற்­றி­ருக்­கும் இந்த மின்­னி­லக்­கக் காட்சி, விருது பெற்ற கவின்­கலை, காட்­சிக்­க­லைக் கலை­ஞர்­கள், எழுத்­தா­ளர்­கள் குறித்த காணொ­ளி­கள், வெளி­யீ­டு­கள், பத்­தி­ரி­கைச் செய்தி உள்­ளிட்ட பல விவ­ரங்­க­ளை­யும் கொண்­டுள்­ளது. மின்­னி­லக்­கத் திரை­க­ளைத் தொட்டு, விவ­ரங்­ க­ளைப் பெற­லாம், காணொ­ளி­ களைக் காண­லாம்.

மேலும், கலா­சா­ரப் பதக்­கம் பெற்ற எழுத்­தா­ளர்­க­ளின் புத்­த­கங்­கள், கலா­சா­ரப் பதக்­கம், பேனா, சான்­றி­தழ் ஆகி­ய­வை­யும் காட்­சிக்கு வைக்­கப்­பட்­டுள்­ளன.

கியூ­ஆர் குறி­யீ­டு­களை வருடி விருது பெற்­றோர் குறித்த மேலும் பல தக­வல்­களை எங்கே பெற­லாம் என்­பதை அறிந்­து­கொள்­ளும் வச­தி­யும் உண்டு.

கண்­காட்­சி­யின் உள்­ள­டக்­கம், ourCMstory.sg எனும் மின்­னி­லக்­கத் ­த­ளத்­தில் உள்­ளது.

இத்­த­ளம் புதிய நிகழ்ச்­சி­கள், படைப்­பு­க­ளு­டன் தொடர்ந்து புதுப்­பிக்­கப்­படும். இது மெய்­நி­கர் காட்­சித்­த­ளத்­தை­யும் கொண்­டுள்­ளது.

தேசிய நூலக வாரி­யத்­து­டன் இணைந்து, கலா­சா­ரப் பதக்­கம் பெற்­ற­வர்­க­ளு­டன் பிற முக்­கிய கலை­ஞர்­க­ளின் பணி­களை ஆவ­ணப்­ப­டுத்­தும் வகை­யில் சிங்­கப்­பூர் இணைய கலைக் களஞ்­சி­யத்தை உரு­வாக்­கும் முயற்­சி­யி­லும் தேசிய கலை­கள் மன்­றம் ஈடு­பட்­டுள்­ளது.

சிங்­கப்­பூ­ரின் முன்­னோடி நாட­கக் கலை­ஞ­ரும் கவி­ஞ­ரு­மான நா.பழ­நி­வேலு, படைப்­பா­ளர்­கள் சிங்கை முகி­லன், பி.கிருஷ்­ணன், சிங்கை மா. இளங்­கண்­ணன், இராம. கண்­ண­பி­ரான், ஜே.எம்.சாலி, க.து.மு.இக்­பால், கலை­ஞர்­கள் மாதவி கிரு­ஷ­ணன், ச.வர­தன், நீலா சத்­தி­ய­லிங்­கம், சாந்தா பாஸ்­கர் ஆகி­யோர் இந்­நாட்­டில் தமிழ்க் கலை, இலக்­கி­யத்­தில் குறிப்­பி­டத்­தக்க பங்­காற்­றி­ய­தற்­காக கலா­சார பதக்­கம் வழங்­கிச் சிறப்­பிக்­கப்­பட்­ட­வர்­கள்.

இவ்விருது சிங்கப்பூரின் அன்றைய கலாச்சார அமைச்சர், அமரர் ஓங் டெங் சியோங்கால் 1979ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது.

தேசிய கலை­கள் மன்­றம் நிர்­ வ­கிக்கும் கலாசாரப் பதக்கத்தை அதி­பர் வழங்கி வருகிறார்.

இந்­தப் பதக்­கம் பெறுவோர் மேலும் படைப்­பு­களை உரு­வாக்க $80,000வரை நிதி உத­வி­யும் அளிக்­கப்­ப­டு­கிறது.

தி ஆர்ட்ஸ் ஹவு­சில் நடை­ பெ­றும் கண்­காட்­சியை இன்று முதல் பொது­மக்­கள் காண­லாம். அனு­மதி இல­வ­சம். மேல் விவ­ரங்­ களுக்­கு: https://ourCMstory.sg

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!