ஐரோப்பிய ஒன்றியத்துடன் பொருந்தும் சுகாதார சான்றிதழ்கள்

வரும் டிசம்­பர் ஏழாம் தேதி­யி­லி­ருந்து, ஐரோப்­பிய ஒன்­றி­யத்­தின் மின்­னி­லக்க கொவிட் சான்­றி­தழ் முறை­யு­டன் பொருந்­திச்­செல்­லும் கொவிட்-19 சுகா­தார சான்­றி­தழ்­களை சிங்­கப்­பூர் வழங்­கும். இது ஐரோப்­பா­வுக்­கும் சிங்­கப்­பூ­ருக்­கும் இடை­யி­லான பய­ணங்­களை இன்­னும் எளி­தாக்­கும்.

மேலும், சிங்­கப்­பூர் வழங்­கும் இந்த புது­வ­கைச் சான்­றி­தழ்­கள் உள்­ள­வர்­க­ளுக்­கும் ஐரோப்­பிய ஒன்­றி­யத்­தில் தடுப்­பூசி போட்­டுக்­கொண்­ட­வர்­க­ளுக்­கான நட­வ­டிக்­கை­கள் பொருந்­தும். போக்­கு­வ­ரத்து அமைச்­சர் திரு எஸ் ஈஸ்­வ­ரன் நேற்று இத்­த­க­வ­லைத் தெரி­வித்­தார்.

வரும் டிசம்­பர் ஏழாம் தேதி­யி­லி­ருந்து ‘ஈயூ டிசிசி’ (EU DCC) முறை­யில் வழங்­கப்­படும் கொவிட்-19 சான்­றி­தழ்­களை, தடுப்­பூசி போட்­டுக்­கொண்­ட­தற்கு சான்­றாக சிங்­கப்­பூர் ஏற்­றுக்­கொள்­ளும். ‘ஈயூ டிசிசி’ முறை­யில் இருக்­கும் சான்­றி­தழ்­களை ஐரோப்­பிய ஒன்­றிய நாடு­கள் அல்­லது தடுப்­பூ­சிப் பய­ணத் தட ஏற்­பாடு இல்­லாத நாடு­கள் வழங்­கி­யி­ருக்­க­லாம். அவ்­வாறு இருப்­பி­னும், அவற்றைக் கொண்டு தடுப்­பூ­சிப் பய­ணத் தட ஏற்­பாடு உள்ள நாடு­க­ளி­லி­ருந்து இங்கு வர­லாம்.

ஆனால் அண்­மைய பயண விவ­ரம், பரி­சோ­த­னை­கள் போன்ற இத்­த­கைய பய­ணி­கள் தடுப்­பூ­சிப் பய­ணத் தட ஏற்­பாட்­டில் உள்ள மற்ற நிபந்­த­னை­களை நிறை­வு­செய்­ய­வேண்­டும்.

இம்­மா­தம் 25ஆம் நில­வ­ரப்­படி ஐரோப்­பிய ஒன்­றி­யத்­தில் உள்ள எல்லா 27 நாடு­களும் ‘ஈயூ டிசிசி’ முறை­யில் கொவிட்-19 சுகா­தா­ரச் சான்­றி­தழ்­களை வழங்­கு­கின்­றன. ஒன்­றி­யத்தில் இல்­லாத மேலும் 24 நாடு­களும் இந்த முறை­யைப் பின்­பற்­று­கின்­றன. அவற்­றில் நியூ­சிலாந்து, இஸ்­ரேல், துருக்கி, பிரிட்­டன் உள்­ளிட்­ட­வை­யும் அடங்­கும்.

சிங்­கப்­பூ­ரின் ‘ஹெல்த்­செர்ட்ஸ்’ சான்­றி­தழ்­களை ஐரோப்­பிய ஒன்­றி­யம் கடந்த 24ஆம் தேதி அங்­கீ­க­ரிக்க முடிவு செய்­தது. இதை அடுத்து ‘ஈயூ டிசிசி’ முறைக்கு ஏது­வான சான்­றி­தழ்­களை வழங்­கும் முடிவு எடுக்­கப்­பட்­டது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!