ஐந்து பேர் அமர்ந்து உண்ண மேலும் இரண்டு உணவங்காடி நிலையங்கள் அனுமதி

ஐந்து பேர் அமர்ந்து உண்ண மேலும் இரண்டு உணவங்காடி நிலையங்கள் அனுமதி

1 mins read
b31c7051-e6a2-4b49-a938-6fe7e9b4ce10
-

இங்­குள்ள மேலும் இரண்டு உண­வங்­காடி நிலை­யங்­களும் பத்து காப்பி கடை­களும் முழு­மை­யா­கத் தடுப்­பூசி போட்­டுக்கொண்­ட, அதிகபட்சம் ஐந்து பேர் உள்ள குழுக்­கள் அமர்ந்து உண்ண அனு­ம­தித்­துள்­ளன.

தெம்­ப­னிஸ் ரவுண்ட் ஈரச்சந்தை மற்­றும் உண­வங்­காடி நிலை­யம், தாமான் ஜூரோங் ஈரச்சந்தை மற்­றும் உண­வங்­காடி நிலை­யம் ஆகி­யவை அந்த இரண்டு உண­வங்­காடி நிலை­யங்­கள்.

லோவர் டெல்டா ரோட்­டில் உள்ள சுவான் கீ காப்பி கடை, தாகூர் லேனில் உள்ள ஹங்­கர்­ஹ­வுஸ் காப்­பிக் கடை உள்­ளிட்­டவை ஐவர் கொண்ட குழுக்­க­ளுக்கு திறந்­து­வி­டப்­பட்­டுள்­ளன.

வரும் திங்­கள் 29ஆம் தேதிக்­குள் மேலும் 19 உண­வங்­காடி நிலை­யங்­கள் அதி­க­பட்­சம் ஐந்து பேர் கொண்ட குழுக்­கள் ஒன்­றாக அமர்ந்து உண்ண அனு­ம­திக்­கும்.

இதன்வழி அதற்கு அனு­ம­தித்­துள்ள உண­வங்­காடி நிலை­யங்­க­ளின் எண்­ணிக்­கை 32ஆக உயரும்.

வரும் செவ்­வாய்க்­கி­ழ­மை 30ஆம் தேதிக்­குள் எஞ்­சி­யுள்ள உண­வங்­காடி நிலை­யங்­களில் ஐந்து பேர் வரை உள்ள குழுக்­கள் அமர்ந்து உண்­ப­தற்­கான நுழை­வுச் சோத­னை­கள் நடப்­பில் இருக்­கும்.

தேசிய சுற்­றுப்­புற ஆணை­யத்­தின் இணை­யத்­த­ளம் இதைத் தெரி­வித்­தது.