பெரிதும் உருமாறிய 'பி11529' வகைக் கிருமியால் கவலை

1 mins read
88667ff1-a887-486c-8940-c8dcf3464bcb
-

தென்­னாப்­பி­ரிக்­கா­வில் பெரிதும் உரு­மா­றிய புதிய கொவிட்-19 கிருமி வகை கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்­ளது. மிக­வே­க­மா­கப் பர­வக்­கூ­டி­ய இக்கிருமிய பற்றி கவலை எழுந்­துள்­ளது.

தென்­னாப்­பி­ரிக்­கா­வின் ஒன்­பது மாநி­லங்­களில் இந்­தக் கிருமி வகை வேக­மா­கப் பர­வி­யுள்­ள­தாக நம்­பப்­ ப­டு­கிறது. அந்­நாட்­டில் பி11529 கிருமி வகை 22 பேருக்­குத் தொற்­றி­யுள்­ள­தாக நேற்­று­முன்­தி­னம் அர­சாங்­கம் உறு­திப்­ப­டுத்­தி­யது. இன்­னும் பல­ருக்கு நோய் பர­வி­யி­ருக்­க­லாம் என்ற சந்­தே­க­மும் உள்­ளது.

போட்ஸ்­வானா, ஹாங்­காங் உள்­ளிட்ட இடங்­களில் புதிய கிருமி வகை கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்­ளது.

இந்­தக் கிரு­மி ­வகை கவலை அளிப்­பது ஏன்?

தடுப்­பூ­சி­கள் இக்­கி­ருமி வகைக்கு எதி­ராக வலு­வா­கச் செயல்­ப­டா­மல் போக­லாம். புதி­தா­கத் தோன்­றிய இந்த பி11529 கிருமி வகை பல முறை உரு­மா­றி­யி­ருப்­பதே இதற்­குக் கார­ணம்.

கொவிட்-19 கிரு­மி­யில் உள்ள முட்­கள் கொண்ட புர­தங்­கள் மனித அணுக்­க­ளைப் பிடித்­துக்­கொண்டு பெரு­கு­கின்­றன. ஆனால் பி11529 கிருமி வகை­யில் உள்ள புர­தங்­கள் பல­முறை உரு­மா­றி­யுள்­ள­தால் அவை உட­லில் நச்­சுப்­பொ­ருள் என்பதை அடை­யா­ளம் கண்டு அழிக்­கும் தன்மை தடுப்­பூ­சி­க­ளுக்கு இல்­லா­மல் போக­லாம். அத­னால் தடுப்­பூ­சி­க­ளின் ஆற்­றல் குறை­யக்­கூ­டும்.

அத்­து­டன் இந்த வகைக் கிருமி மிக­வும் வேக­மா­கப் பரவி வரு­வ­தா­கத் தெரி­கிறது. இரண்டு வாரத்­திற்­குள் பி11529 வகை தென்­னாப்­பி­ரிக்­கா­வில் அதி­கம் பரவி வரும் கிரு­மி­யாக மாறி­யுள்­ளதாக அந்­நாட்டு ஆய்­வா­ளர்­கள் கூறுகின்றனர்.