செய்திவிளக்கம்: மனப்போக்குகள் பற்றி நிதி அமைச்சர் லாரன்ஸ் வோங்

தமிழ் முர­சின் நவம்­பர் 24ஆம் தேதி பதிப்­பில், நிதி அமைச்சர் லாரன்ஸ் வோங் கொள்கை ஆய்­வுக் கழ­கம், எஸ் ராஜ­ரத்­னம் அனைத்­து­ல­கக் கல்­விக் கழ­கம் ஏற்­பாடு செய்­தி­ருந்த பாலின அடை­யா­ளம் தொடர்­பான கருத்­த­ரங்­கில் பேசி­யது தொடர்­பான செய்தி வெளி­யா­னது.

முன்­னாள் தூது­வ­ரான திரு ஓங் கெங் யோங் நெறி­யா­ள­ராக பங்கு பெற்ற அக்­க­ருத்­த­ரங்­கில் ஒரு பாலின, இரு பாலின, திரு­நங்­கை­யர் பிரி­வி­னர் (எல்­ஜி­பி­டி­கியூ) குறித்த அர­சாங்­கத்­தின் அணுகு முறை பற்­றி­யும் திரு வோங் பேசி­னார்.

அதில் பங்­கேற்ற பொது­மக்­களில் சிலர், இது­போன்ற சில பிரி­வி­ன­ருக்­குப் பிடி­மா­னம் இல்லை என்­றும் இப்­பி­ரி­வி­ன­ரால் மற்­ற­வர் களு­டன் ஈடு­கொ­டுத்து சம­நி­லை­யில் தொடர்­பு­கொள்ள முடி­ய­வில்லை என்றும் கூறி­னர்.

இக்­க­ருத்­து­கள் நில­வு­வதை ஏற்­றுக்­கொண்ட திரு வோங், சில­ருக்கு பாலின எண்­ணம் குறித்­தும் அடை­யா­ளம் குறித்­தும் ஆழ­மான கருத்­து­கள் உண்டு என்­றும் இது உல­க­ளா­விய போக்கு என்­றும் கூறி­னார்.

“ஆனால், ஒரு பாலின, இரு பாலின, திரு­நங்­கை­யர் பிரி­வி­ன­ருக்கு நான் சொல்­லக்­கூ­டி­யது என்­ன­வென்­றால், மனப்­போக்­கு­கள் நிலை­யாக இருந்­து­வி­டு­வ­தில்லை, அவை மாறி வரு­கின்­றன,” என்று கூறி­ய­வர், அர­சாங்­கம், இப்பிரிவினர், சம­யக்குழுக்­கள் உள்ளிட்ட மக்க ளுடன் இது குறித்து அடிக்­கடி தொடர்­பு­கொள்­வ­தா­கக் கூறினார்.

“இது குறித்த உணர்­வும் மனப்­போக்­கும் மாறி வரு­வது தெள்­ளத் தெளி­வாக தெரி­கிறது, குறிப்­பாக இளை­ய­ரி­ட­மும் அதே சம­யம் சமு­தா­யம் முழு­வ­தி­லும்.”

இது தொடர்­பான கருத்­துப் பரி­மாற்­றம் வீணான ஒன்­றல்ல என்­பது இதி­லி­ருந்து தெரி­கிறது என்ற திரு வோங், “இதன் அம்­சங்­கள் காலம் முழு­வ­தும் இதே­போல் நிலை­பெற்று­ வி­டும் என்­ப­தில்லை,” என்­றும் கூறி­னார்.

“இந்த மனப்­போக்­கு­கள், உணர்வு­கள் மாறி­வ­ரும் நிலை­யில், எந்த மாதி­ரி­யான சம­நிலை உகந்­த­தாக இருக்­கும் என்­பதுபற்றி சமு­தா­யம் சிந்­திக்க வேண்­டும். அத்­து­டன், அர­சாங்­க­மும் எந்த மாதி­ரி­யான சம­நிலை சமு­தா­யத்­துக்­குப் பொருத்­த­மாக இருக்­கும் என்­றும் இதன் தொடர்­பி­லான கொள்­கை­களை எப்­படி சரி­செய்­வது என்­றும் பரி­சீ­லிக்க வேண்­டி­யி­ருக்­கும்,” என்று திரு வோங் கூறினார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!