சேவைத் துறையில் வருவாய் அதிகரிப்பு

ஆண்­டுக்­காண்டு அடிப்­ப­டை­யில் இவ்­வ­ரு­டத்­தின் மூன்­றாம் காலாண்­டில் சேவைத் துறை­யின் வரு­வாய் 16 விழுக்­காடு அதி­க­ரித்­தி­ருக்­கிறது. பொழு­து­போக்கு, தனிப்­பட்ட சேவை­கள் துறை மட்­டும் இதற்கு விதி­வி­லக்கு. ‘சிங்ஸ்­டேட்’ எனப்­படும் சிங்­கப்­பூர் புள்ளி விவ­ரப் பிரிவு இத்­த­க­வல்­களை வெளி­யிட்­டது. தக­வல், தொடர்­புத் துறை­யில் ஆண்­டுக்­காண்டு அடிப்­ப­டை­யில் மொத்த வரு­வாய் 39.4 விழுக்­காடு அதி­க­ரித்­தது. இணை­யச் சந்­தை­கள், கணினி விளை­யாட்­டு­கள் உள்­ளிட்­டவை தொடர்­பான அம்­சங்களில் வரு­வாய் அதி­க­ரித்­தது முக்­கி­யக் கார­ணம். முந்­தைய காலாண்­டில் பதி­வா­ன­தைக் காட்­டி­லும் இத்­து­றை­யின் வரு­வாய் ஏழு விழுக்­காடு அதி­க­ரித்­தது.

‘டிரான்ஸ்­போர்ட்­டே­ஷன் அண்ட் ஸ்டோ­ரேஜ்’ எனப்­படும் போக்­கு­வரத்­துச் சேவை­கள் துறை ஆண்டுக்­காண்டு அடிப்­ப­டை­யில் 39.1 வளர்ச்­சி­ய­டைந்­தது. உல­க­ள­வில் எல்­லைக் கட்­டுப்­பா­டு­கள் தளர்த்­தப்­பட்­ட­தால் இதன் ஓர் அங்­க­மான விமா­னப் போக்­கு­வ­ரத்­துத் துறை­யில் வர்த்­தக நட­வ­டிக்­கை­கள் அதி­க­ரித்­தது இதற்­குக் கார­ணம். காலாண்­டுக்­குக் காலாண்டு அடிப்­ப­டை­யில் போக்கு­வ­ரத்­துச் சேவை­கள் துறை­யின் வரு­வாய் 13 விழுக்­காடு அதி­க­ரித்­தது.

எனி­னும், பொழு­து­போக்கு, தனிப்­பட்ட சேவை­கள் துறை­யில் ஆண்­டுக்­காண்டு அடிப்­ப­டை­யில் வரு­வாய் 13.3 விழுக்­காடு குறைந்­தது. சமூக ஒன்­று­கூ­டல் விதி­முறை­கள் முடுக்­கி­வி­டப்­பட்­ட­தால் கண்கவர் இடங்­கள், விளை­யாட்டு வசதி­கள் ஆகி­யவை பாதிக்­கப்­பட்­ட­தைத் தொடர்ந்து இந்­நிலை உரு­வா­னது. இத்­து­றை­யின் வரு­வாய் காலாண்­டுக்­குக் காலாண்டு அடிப்­படை­யி­லும் 13.7 விழுக்­காடு குறைந்­தது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!