அதிகரிக்கவுள்ள மசேநிதி அடிப்படை சுகாதாரத் தொகை

அதிகரிக்கவுள்ள மசேநிதி அடிப்படை சுகாதாரத் தொகை

1 mins read
20c63e8c-778a-4354-b8ec-3e7afd577fac
-

மத்­திய சேம­நி­திச் சந்­தா­வில் அடிப்படை சுகா­தா­ரத் தேவை­களுக்­காக ஒதுக்­கப்­படும் தொகை 63,000 வெள்­ளி­யி­லி­ருந்து 66,000 வெள்ளிக்கு உயர்த்­தப்­ப­டவுள்ளது. 65 வய­துக்கு உட்­பட்ட மத்­திய சேம­நி­திச் சந்தா உறுப்­பி­னர்­களுக்கு இது பொருந்­தும்.

இம்­மாற்­றம் வரும் ஜன­வரி மாதம் ஒன்­றாம் தேதி நடப்­புக்கு வரும் என்று சுகா­தார அமைச்­சும் வீட­மைப்பு வளர்ச்­சிக் கழ­க­மும் இணைந்து வெளி­யிட்ட அறிக்கை­யில் தெரி­விக்­கப்­பட்­டது. வய­தான பிறகு மானி­யங்­க­ளு­டன் வழங்­கப்­படும் அடிப்­படை சுகா­தா­ர­சேவை­க­ளுக்கு ஏறத்­தா­ழத் தேவை­யான தொகை­தான் மத்­திய சேம­நி­திச் சந்­தா­வின் அடிப்­படை சுகா­தா­ரத் தொகை.