நிதித் தகராறில் அதிகமான வங்கிகள், நிதி நிறுவனங்கள்

1 mins read
d365afc5-6b8c-42b6-9632-c015f4642cf4
-

'ஃபிட்ரெக்' எனும் நிதித் தொழில்­துறை சர்ச்­சைத் தீர்வு நிலை­யத்­திற்கு வந்த பாதிக்­கும் மேலான தக­ரா­று­கள் தொடர்­பான கோரிக்­கை­கள் வங்­கி­களுக்கும் நிதி நிறு­வ­னங்­க­ளுக்கும் எதி­ரா­னவை எனத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

கடந்த ஜூன் மாதம் 30ஆம் தேதிவரை வந்த 1,097 கோரிக்­கை­களில் 52 விழுக்­காடு வங்­கி­க­ளுக்­கும் நிதி நிறு­வ­னங்­க­ளுக்கும் எதி­ரா­க­ப் பதி­வா­னவை. எனி­னும், மொத்த கோரிக்­கை­க­ளின் எண்­ணிக்கை இதற்கு முந்­தைய ஆண்டு பதி­வா­ன­தைக் காட்­டி­லும் குறைவு.

தொடர்ந்து மூன்­றா­வது ஆண்­டாக 1,000க்கும் அதி­க­மான கோரிக்­கை­கள் பதி­வா­யின.