பேருந்துச் சேவைகள் மாற்றம்

பேருந்துச் சேவைகள் மாற்றம்

1 mins read
2a63fe80-862f-4a6c-bd2d-91632d4785e2
-

சன்­டெக் சிங்­கப்­பூர் மாநாட்டு நிலை­யம், காட்­சி­ய­கம், சிங்­கப்­பூர் எக்ஸ்போ ஆகி­யவை இருக்­கும் பகு­தி­களில் சாலை­கள் போக்குவரத்துக்கு மூடப்­ப­டு­வதால் எஸ்­பி­எஸ் டிரான்­சிட் நிறு­வ­னத்­தைச் சேர்ந்த ஏழு பேருந்­துச் சேவை­கள் இவ்­வார இறு­தி­யில் பாதிக்­கப்­படும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. 70எம், 111, 133, 162எம், 502 ஆகிய சேவை­கள் இன்று காலை ஒரு மணி­யி­லி­ருந்து ஆறு மணி வரை­யி­லும் காலை 10 மணி­ முதல் மாலை ஐந்து மணி வரை­யி­லும் சன்­டெக் சிட்­டிக்கு முன்­னால் இருக்­கும் தெமா­செக் புல­வார்ட் பகு­தி­யில் உள்ள பேருந்து நிறுத்­தத்­தில் நிற்க­மாட்டா. நாளை காலை நான்கு மணி முதல் மாலை நான்கு மணி வரை­க்கும் இந்த மாற்­றங்­கள் பொருந்­தும்.

பேருந்­துச் சேவை­கள் 24, 38 ஆகி­யவை எக்ஸ்போவிற்கு அருகே உள்ள அப்­பர் சாங்கி ரோடு ஈஸ்ட் சாலை­யில் உள்ள பேருந்து நிறுத்­தத்­தில் நாளை காலை எட்டு மணி முதல் பின்­னி­ரவு ஒரு மணி­வரை நிற்­கமாட்டா.