கனிவன்பை ஊக்குவிக்க மழலையர் எடுக்கும் முயற்சி

பீஷா­ன் ரயில் நிலையத்திலிருந்து

செம்­பவாங்­கிற்­குப் பய­ணம் செய்­யும்­போது காய­ம­டைந்த ஒரு ‘ஃபிளமிங்கோ’ பறவை பெரு­விரைவு ரயி­லுக்­குள் நுழை­கிறது. ‘ஸ்டேண்ட்-அப் ஸ்டேசி’ என்ற கனி­வன்­புக்­கான உரு­வச் சின்­னம் ரயி­லின் சுவ­ரில் இருக்­கும் ஒட்­டு­வில்­லை­யை­விட்டு வெளியே வரு­கிறது. காய­மடைந்த அப்­ப­ற­வைக்­குத் தனது இருக்­கையை விட்­டுக்­கொ­டுக்கு­மாறு கைபே­சி­யில் மூழ்­கி­யி­ருக்­கும் சிங்­கத்­தி­டம் ஸ்டேசி வேண்­டிக்­கொள்­கிறது.

மன்­னிப்­புக் கேட்­ட­வாறு சிங்­கம் தனது இருக்­கையை விட்­டுக்­கொ­டுக்­கிறது. இது உள்­ளிட்ட பல காட்­சி­கள், ‘பிசி­எஃப் ஸ்பார்க்­கல்­டோட்ஸ்’ பாலர்­பள்ளி மாண­வர்­கள் உரு­வாக்­கி­யுள்ள புத்­த­கத்­தில் இடம்­பெ­ற்­றுள்­ளன. இதை நிலப் போக்­கு­வ­ரத்து ஆணை­யத்­து­டன் இணைந்து உரு­வாக்­கி­யுள்­ள­னர் சிறு­வர்­கள்.

‘மேக்ஸ் அண்ட் ரோபீஸ் மேஜிக்­கல் ட்ரெயின் ரைட்’ எனப் பெய­ரி­டப்­பட்­டுள்ள இப்­புத்­த­கத்­தில் இடம்­பெ­றும் நிகழ்­வு­கள், நீ சூன் சென்ட்ரல் வீவக புளோக் 723ல் உள்ள ‘பிசி­எஃப் ஸ்பார்க்­கல்­டோட்ஸ்’ மாண­வர்­களின் கற்­பனையில் உருவானவை.

அடுத்த மாதம் 18ஆம் தேதி­யி­லி­ருந்து அனைத்து ‘மெக்­டோ­னல்ட்ஸ்’ உண­வ­கங்­க­ளி­லும் இதைப் பெற்­றுக்­கொள்­ள­லாம். வாடிக்­கை­யா­ளர்­கள் செய்­ய­வேண்­டி­யது, மெக்டோனல்ட்ஸ் கிளை ஒன்றில் ‘ஹேப்பி மீல்’ உணவை வாங்­க­வேண்­டும்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!