‘குலவழி உணர்வு’ மிரட்டல் வேரூன்ற அனுமதிக்கக்கூடாது

முரசொலி

சிங்­கப்­பூர் பல­ ச­மய, பல இனச் சமூ­கம். வெற்­றி­கரமான சமூ­கம், நல்­லி­ணக்­கத்­திற்கு ஓர் எடுத்­துக்­காட்டு. இங்­குள்ள எல்லா இனத்­த­வ­ரும் தங்­கள் தங்­கள் சிறப்பு இயல்­பு­களை, வழ­மை­க­ளை சுதந்­தி­ர­மா­கக் கடைப்­பி­டித்து, கட்­டிக்­காத்­து­வ­ருகிறார்கள்.

அதே­வே­ளை­யில், தேசிய நலன் என்று வரும்­போது சிறு­பான்­மை­யி­னர், பெரும்­பான்­மை­யி­னர் எவராக இருந்­தா­லும் அவர்­கள் தாங்­கள் சிங்­கப்­பூரர்­கள்- என்ற ஒரே பொது அடைளத்­து­டன் ஒற்­றுமைக நாட்­டுக்­கும் தங்­க­ளுக்­கும் தோள்­கொ­டுக்­கி­றார்­கள். இதுவே சிங்­கப்­பூ­ரின் சாத­னை­களுக்­கும் வெற்­றி­க­ளுக்­கும் மூலா­தா­ர­மாக இருந்து வந்­துள்­ளது.

இன ஒற்­றுமை, நல்­லி­ணக்­கம் இல்லை எனில் வெற்­றி­க­ர­மான சிங்­கப்­பூர் இல்லை என்­பதை சிங்கப்பூர் சமூ­கம் நன்கு புரிந்­து­கொண்­டுள்­ளது.

இன, கலா­சார, சமய உணர்­வு­க­ளை­விட தேசிய ஒட்­டு­மொத்த நலன்­கள் முக்­கி­யம் என்­ப­தைப் புரிந்து கொண்­ட­வர்­கள் சிங்­கப்­பூ­ரர்­கள். சமூக நல்­லி­ணக்­கத்­தைக் கிள்­ளுக்­கீரைக ரும் கரு­தி­வி­டக் கூடாது என்­பதை சிங்­கப்­பூ­ரர்­கள் எப்­போ­துமே தங்­கள் மனதில் நிறுத்தி செயல்­ப­டு­கி­றார்­கள்.

இத்­த­கைய நிலை அது­வாக ஒரேநாளில் ஏற்­பட்ட ஒன்­றல்ல. இந்­தப் புரிந்­து­ணர்வு ஏற்­பட்டு நிலைத்து இருக்க சிங்­கப்­பூர் பட்­ட­பாடு கொஞ்­ச­நஞ்­ச­மல்ல. இதை உறு­திப்­ப­டுத்த சட்­ட­திட்­டங்­களும் உறு­துணைக இருந்து வந்­துள்­ளன, வரு­கின்றன.

பெரும்­பான்மைச் சமூ­கம், சிறு­பான்­மைச் சமூ­கங்­கள் வாழ்­கின்ற சிங்­கப்­பூ­ரில் எல்­லா­ரை­யும் தனித்த ஒரே அடைளத்­தின் கீழ் பல­வந்­த­மா­கக் கொண்டு வரு­வ­தற்­கான முயற்­சி­கள் இங்கு மேற்­கொள்­ளப்­ப­ட­வில்லை.

அப்­ப­டிச் செய்­தால் எதிர் விளை­வு­கள் இருக்கும் என்­பது தவிர்க்க இய­லா­தது. அத்­த­கைய அணுகு­மு­றைக்­குப் பதி­லாக, இங்­குள்ள வெவ்­வே­றான குழுக்­க­ளின் பொது­வான, பொது நல­னுக்­கான விருப்­பங்­க­ளை­யும் கருத்­து­க­ளை­யும் பொதுப்­ப­டுத்தி, அதைப் பலப்­ப­டுத்தி அதன்மூலமே சிங்­கப்­பூ­ரின் வெற்றி சாதிக்­கப்­பட்டு வந்­துள்­ளது. இருந்­தா­லும்­கூட சிர­மப்­பட்டு, ஒன்று சேர்ந்­தவை எளி­தில் பிரிந்து­வி­டக்­கூ­டிய நிலை எங்­கே­யும் உண்டு. இதுவே உண்மை நில­வ­ரம் என்­பதை மறந்து­வி­டக்­கூ­டாது.

குறிப்­பாக இன்­றைய உல­கில் புதிதாக ஒரு கலா­சார மிரட்­டல் தலை எடுக்­கும் சூழ­லில் இது இன்­னும் முக்­கி­யத்­து­வம் பெறு­கிறது. நாடு­கள் பின்னிப்பிணைந்து செயல்­ப­ட­வேண்­டிய தேவை உரு­வாகி இருக்­கிறது. உல­க­ம­யம் உரு­வாகிவிட்­டது. இச்சூழலில் மேற்­கத்­திய நாடு­களில் புதிய கலா­சா­ரப் போர் தலை­தூக்­கு­கிறது. சமூ­கத்­தை­விட தங்­கள் நலனை சிலர் பெரி­தாக நினைக்­கிறார்­கள்.

அதற்கு அவர்­கள் அதிக முக்­கி­யத்­து­வம் கொடுக்­கி­றார்­கள். வெவ்­வே­றான சமூ­கக் குழுக்­கள் பாலி­னத்­தன்மை, இனம் போன்ற கலா­சாரப் பிரச்­சி­னை­கள் தொடர்­பில் வேறு­பட்ட அணு­கு­மு­றை­க­ளைக் கைளுகின்­றன. அத்­த­கைய செயல்­கள் அர­சி­ய­லில் எதி­ரொ­லிக்­கின்­றன.

இதுபோன்ற புதிய மிரட்­ட­லின் விளை­வாக, அதன் ஆதிக்­கத்­தின் தாக்­க­மாக, சிங்­கப்­பூ­ரில் புதிய வகை திடீர் அடைள அர­சி­யல் இடம்­பெற்று, அது வழக்­க­மான நன்கு தெரிந்த வெவ்­வே­றான இன, சமய வரம்­பு­க­ளுக்கு அப்­பா­லும் தாக்­கத்தை ஏற்­ப­டுத்­தும் வாய்ப்பு இருக்­கிறது.

நிதி அமைச்­சர் லாரன்ஸ் வோங், அண்­மை­யில் எஸ் ராஜ­ரத்­னம் அனைத்­து­லக கொள்கை ஆய்­வுக் கழ­கத்­தில் ஆற்­றிய உரை­யில் இதைத்­தான் முக்கி­ய­மாக குறிப்­பிட்­டார்.

சிங்­கப்­பூ­ரர்­கள் மிக­வும் கவ­ன­மாக இருந்­து­கொண்டு விவே­க­மாகச் செயல்­ப­ட­வில்லை என்றால் அத்­த­கைய புதிய 'குல­வ­ழிப் பிரி­வி­னர்' உணர்வு சிங்­கப்­பூ­ரில் மிக­வும் எளி­தாக வேர் ஊன்­றி­வி­டும் ஆபத்து இருக்­கிறது.

இதைத் தடுக்­க­வில்லை என்­றால் அர­சி­ய­லி­லும் சமூ­கங்­க­ளி­லும் பிளவு நிலை ஏற்­ப­டு­வ­தைத் தவிர்க்க முடிது. அப்­ப­டிப்­பட்ட ஒரு நிலை­யில், அத­னால் ஏற்­ப­டக்­கூ­டிய புதிய அடைளப் பிரச்­சி­னை­கள் அர­சி­ய­லில் தாக்­கத்தை ஏற்­ப­டுத்­தும் என்­பதை அமைச்­சர் மக்­க­ளுக்கு நினை­வுப்­ப­டுத்தி சிங்­கப்­பூ­ரர்­களை எச்­ச­ரித்து இருக்­கி­றார்.

சமூ­கத்­தில் ஒவ்­வொரு சிங்­கப்­பூ­ர­ருக்­கும் இடம் உண்டு என்­பதையும் அமைச்­சர் திட்­ட­வட்­ட­மாக வலி­யு­றுத்­தி இருக்கிறார்.

வேறு­பட்ட குல­வ­ழி­யி­னர் அரை நூற்­றாண்­டுக்­கும் அதிக கால­மாக அமை­தி­யு­டன், நல்­லி­ணக்­கத்­து­டன், ஒற்­று­மை­யு­டன் வாழ்ந்து வரும் நாடு சிங்­கப்­பூர். இந்த நல்­லி­ணக்­கம் எப்­போ­துமே கத்தி­முனை போன்­றது. தொடர்ந்து இதில் கவ­னம் செலுத்தி வர­வேண்­டும். இதை முக்­கி­ய­மாக நிலை­நாட்டி வர­வேண்­டும் என்று தெரி­வித்த அமைச்­சர், குல­வழி மிரட்­ட­லை­யும் அடைள அர­சி­ய­லை­யும் சமா­ளிக்க வேண்­டும் என்­பதை வலியுறுத்தினார்.

போட்டி, பிணக்கத்தைவிட ஒத்­து­ழைப்பே முன்­னே­று­வ­தற்­கான தலை­சி­றந்த வழி என்­பதை நம்மு­டைய முன்­னோ­டி­கள் புரிந்­து­கொண்டு இருந்­தார்­கள். இதுவே சிங்கப்பூரின் பொரு­ளி­யலுக்கு மட்டு­மின்றி முழு சமூ­கத்­திற்­கும் அடிப்­படைக இருந்து வந்­துள்­ளது. ஒவ்­வொரு பிரி­வி­ன­ரின் உண்மைன அக்­க­றை­க­ளுக்­குச் செவி­ம­டுத்து அவற்­றுக்குத் தீர்வு­காணும் மு­றையே தலை­சி­றந்­த­தாக இருக்­கும்.

அதே­நே­ரத்­தில் தனி­ அடைளம் அல்­லது குலவழி உணர்வு அடைளத்தை அர­சி­ய­லில் மித­மிஞ்சி சார்ந்து இருப்­ப­தை­யும் நாம் தவிர்த்­துக்­கொள்ள வேண்­டும் என்­பதை எல்லாம் அமைச்­சர் விளக்­கி­னார்.

உலகில் புதிதாக தலைதூக்கும் குலவழி உணர்வு நில­வ­ரம் சிங்­கப்­பூ­ருக்கு மிரட்­ட­லாக ஆவதைத் தவிர்த்­துக்­கொள்­ள­லாம் என்­ப­தில் ஐய­மில்லை.

உண்மை நில­வ­ரத்­தை­யும் அத­னால் ஏற்­ப­டக்­கூடிய மிரட்­டல்­க­ளை­யும் நன்கு புரிந்­து­கொண்டு செயல்­பட வேண்­டும் என்­பதை மக்­கள் புரிந்­து­கொள்­ள­வேண்­டும்.

இந்த மிரட்­ட­லைச் சமா­ளிக்க செம்மைன சட்டத்­திட்­டங்­களை அர­சாங்­கம் கொண்­டி­ருந்­தாலும் அவை எல்­லாம் இதில் கடைசி முயற்சிகத்­தான் இருக்க முடி­யும்.

அர­சாங்­க­மும் சமூ­க­மும் சேர்ந்­து­தான் இத்­தகைய நிலை­யைத் தவிர்த்­துக்­கொள்ள முடி­யும்.

சமூ­க­மும் குடிமை அமைப்­பு­களும் சமூ­கத் தலை­வர்­களும் மக்­க­ளி­டையே தொடர்­பு­க­ளைப் பலப்­படுத்த தொடர்ந்து பாடு­பட வேண்­டும். சமூக ஊட­கங்­களில் தங்­கள் நலன்­க­ளையே பெரி­தாக ஊதி­வி­டு­வோர், எதிர் விளை­வு­கள் இருக்­கும் என்­பதை எப்­போ­துமே கவ­னத்­தில்கொள்ள வேண்­டும்.

பன்­ம­யம் என்­பது தவிர்க்க இய­லாது என்­பதை மேலும் மேலும் அதி­க­மாக மக்­கள் புரிந்­து­கொள்ள வேண்­டும். ஐக்கியமும் நல்லிணக்கமும் தொடர்ந்து வலுவாக வேண்டும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!