உடல்நலனுக்கு ஏற்ற பழக்கம் ஏற்பட உதவும் செயல்திட்டம்

தெம்பனிஸ்வாசிகள் மருத்துவரின் பரிந்துரைக்கேற்ற வாழ்க்கைப்பாணிக்கு மாற உதவி

உடல்­ந­லத்­திற்கு ஏற்ற வாழ்க்­கைப் பாணி மாற்­றங்­களை கடைப்­பி­டிக்க உத­வும் நோக்­கத்­தில் தெம்­ப­னிஸ் மக்­க­ளுக்­குப் புதிய செயல்­திட்­டம் தொடங்­கப்­பட்டு உள்­ளது.

தேவைக்­கேற்ப வடி­வ­மைக்­கப்­பட்டு இருக்­கும் அந்­தத் திட்­டத்­தின்­ மூ­லம், 40க்கும் அதிக வய­துள்ள சிங்­கப்­பூர் குடி­மக்­களும் நிரந்­த­ர­வா­சி­களும் இல­வ­ச­மா­கப் பய­ன­டை­ய­லாம். தொடக்­க­மாக 250 பேரை உள்­ள­டக்க இலக்கு நிர்­ண­யிக்­கப்­பட்டு உள்­ளது.

'அவர் தெம்­ப­னிஸ் ஹப்­' வளா கத்தில் சுகா­தார மூத்த துணை அமைச்­சர் கோ போ கூன் அந்­தத் திட்­டத்­தைத் தொடங்கி வைத்­தார்.

ஒரு­வரை பரி­சோ­தித்த மருத்­து­வர், அவ­ரின் உட­லில் ஏற்­பட்டு இருக்­கும் நோய்­களை அல்­லது குறை­பா­டு­களை எப்­படி தவிர்த்­துக்­கொள்­ள­லாம் என்­பது பற்றி தெரி­விக்­கும் ஆலோ­ச­னை­களை, பரிந்­து­ரை­களை முற்­றி­லும் பின்­பற்ற முடி­யாத சூழ்­நிலை நோயாளிக்கு இருக்­கக்­கூ­டும்.

அத்­த­கைய தெம்­ப­னிஸ்வாசிகள் தங்­கள் உடல்­ந­ல­னுக்கு அவசி­ய­ மான வாழ்க்­கைப் பாணி­க­ளைப் பின்­பற்­று­வ­தற்கு இப்­போது வழி ஏற்­பட்­டுள்­ளது.

அவர்­கள் இந்த ஆறு­வார கால செயல்­திட்­டத்­தில் சேர்ந்­து­கொண்டு பலன் அடை­ய­லாம்.

உடல்­நல ஒருங்­கி­ணைப்­பா­ளர் ஒரு­வர், காலக்­கி­ரம முறைப்­படி தெம்­ப­னிஸ் குடி­யி­ருப்­பா­ளர்­களை அணுகி அவர்­க­ளுக்கு இதன் தொடர்­பில் வழி­காட்டி உத­வு­வார்.

இந்­தத் திட்­டம் 'மேம்­படும் உடல்­ந­லம்' என்று குறிப்­பி­டப்­படும்.

சிங்­ஹெல்த் பல­துறை மருந்­த­கம் தலை­மை­யில் இப்புதிய செயல்­திட்­டம் தொடங்­கப்­பட்டுள்­ளது.

சிங்­ஹெல்த் நிறு­வ­னத்­தின் ஊழி­யர் ஒவ்­வொரு குடி­யி­ருப்­பா­ள­ரை­யும் எட்டி அவர்­கள் உடல்­ந­லத்­திற்கு ஏற்ற, மருத்­து­வர் பரிந்­து­ரைத்த வாழ்க்­கைப் பாணியைக் கடைப்­பிடிக்க உத­வும் பரா­ம­ரிப்புத் திட்­டம் ஒன்றை உரு­வாக்க உத­வு­வார்.

மெய்­நி­கர் பயி­ல­ரங்­கு­கள், சான்றி­தழ் பெற்ற பயிற்­றுவிப்பாளர் நடத்­தும் பயிற்சி வகுப்­பு­கள் போன்றவை மூலம் மக்­க­ளுக்கு உதவி கிடைக்­கும். இதன் வழி அவர்­கள் சொந்த உடற்­ப­யிற்சி ஏற்­பா­டு­களைச் செய்­து­கொள்­ள­லாம்.

உடல்­ந­லத்­துக்கு உகந்த வாழ்க்­கைப்பாணி­யைப் பின்­பற்­ற­லாம். சிங்­ஹெல்த் பல­துறை மருந்­த­கங்­களின் இணை­யத்­த­ளம் மூலம் குடி­யி­ருப்­பா­ளர்­கள் இத்திட்டத்திற்குப் பதிந்­து­கொள்­ள­லாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!