1,090 பேருக்குத் தொற்று; மரணமும் 3 ஆகக் குறைவு

சிங்­கப்­பூ­ரில் வெள்­ளிக்­கி­ழமை புதி­தாக 1,090 பேருக்கு கொவிட்-19 தொற்று உறு­தி­யா­ன­தாக சுகா­தார அமைச்சு தெரி­வித்­தது. அவர்­க­ளை­யும் சேர்த்து கொரோனா கிருமி தொற்­றி­யோரின் மொத்த எண்­ணிக்கை 259,875. ஆகி­யது.

வாராந்­திர தொற்று அதி­க­ரிப்பு விகி­தம் வெள்­ளிக்­கி­ழமை 0.74 ஆக இருந்­தது. இந்த அதி­க­ரிப்பு விகி­தம் தொடர்ந்து 14 நாட்­க­ளாக 1க்கும் குறை­வா­கவே இருந்து வரு­கிறது. புதிய வாராந்­திர தொற்று எண்­ணிக்கை குறைந்து வரு­வதை இது காட்­டு­கிறது.

கொரோனா கார­ண­மாக மூவர் மர­ண­ம­டைந்­த­னர். அவர்­க­ளுக்கு வயது 69 முதல் 83 வரை. மாண்டவர்­கள் அனை­வ­ருக்­கும் பல்­வேறு உடல்­ந­லப் பிரச்­சி­னை­கள் இருந்­தன. கொவிட்-19 மொத்த மரண எண்­ணிக்கை 684 ஆகி உள்­ளது.

புதி­தாகக் கிருமி தொற்­றி­யோரில் 1,064 பேர் சமூ­கத்­தைச் சேர்ந்­த­வர்­கள். அவர்­களில் 185 பேருக்கு வயது 60 மற்­றும் அதற்­கும் அதி­கம். வெளி­நாட்டு ஊழி­யர் விடு­தி­க­ளைச் சேர்ந்­த­வர்­கள் 22 பேர். நால்­வர் வெளி­நா­டு­களில் இருந்து வந்­த­வர்­கள் என்று அமைச்சு தெரி­வித்­தது.

கடந்த இரண்­டு­வார கால­மாக தீவிர சிகிச்­சைப் பிரிவு பய­னீட்டு அளவு குறைந்து வரு­கிறது. ெவள்ளிக்­கி­ழமை இந்த அளவு 54.2% ஆக இருந்­தது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!