தடை இருந்தாலும் மின்-சிகரெட்டுகளைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகம்

சிங்­கப்­பூ­ரில் மின்­-சிகரெட்டுகளின் பய­னீடும் விற்­பனையும் 2018 பிப்­ர­வரி 1ஆம் தேதி முதல் தடை செய்­யப்­பட்­டன. இருந்­தா­லும்­கூட அத்­தகைய சாத­னங்­க­ளைப் பயன்­படுத்­தும் மக்­க­ளின் எண்­ணிக்கை கொஞ்­சம் கூடி இருக்­கிறது.

'மிலியூ' என்ற நிறு­வ­னம் இணை­யம் மூலம் செப்­டம்­பர் மாதம் நடத்­திய ஆய்­வில் இந்த நில­வரம் தெரி­ய­வந்­துள்­ளது.

ஆய்­வில் கலந்­து­கொண்ட 5,900 பேருக்­கும் அதி­க­மா­ன­வர்­களில் 3.9 விழுக்­காட்­டி­னர் இப்­போது மின்­-சிகரெட்டுகளை அல்­லது குறை­வெப்­ப­நி­லை­யில் ஆவி­யா­கும் மின்­-சிக­ரெட்­டைப் பயன்­படுத்­து­கிறார்­கள் என்­பது தெரி­ய­வந்­துள்­ளது. ஆய்­வில் கலந்­து­கொண்­ட­வர்­க­ளுக்கு வயது 21 முதல் 69 வரை. இதே­போல ஓர் ஆய்வு இந்த ஆண்டு தொடக்­கத்­தில் நடத்­தப்­பட்­டது. அத்­த­கைய கரு­வி­க­ளைப் பயன்­ப­டுத்­து­வோ­ரின் அளவு அப்போது 3% ஆக இருந்­தது.

மின்­-சிகரெட்டு­களில் பயன்­படுத்­தப்­படும் நிக்­கோட்­டின் ஒரு­வரை அடி­மை­யாக்­கி­வி­டும்.

அதில் புற்று­நோயை ஏற்­ப­டுத்­தக்­கூ­டிய பொருட்­களும் கலந்து இருக்கின்றன என்­பது healthhub.sg என்ற இணை­யத்­த­ளம் மூலம் தெரி­ய­வ­ரு­கிறது.

மின்­-சிகரெட்டுகளை வைத்­திருப்­பது, பயன்­படுத்­து­வது, வாங்­கு­வது குற்­றம். அதற்கு அதிகபட்­ச­மாக $2,000 அப­ரா­தம் விதிக்க சட்­டத்­தில் இடம் இருக்­கிறது.

என்­றா­லும்­கூட அந்­தச் சாத­னங்­களை மக்­கள் சட்­ட­வி­ரோ­த­மா­கப் பயன்­ப­டுத்தி வரு­கி­றார்­கள் என்­பது இந்த ஆய்­வின் மூலம் தெரி­ய­ வந்­துள்­ளது.

சிங்­கப்­பூ­ரில் சட்­ட­வி­ரோத மின்-சிகரெட்டுகள் அதி­க­மாக கிடைப்­பதே இதற்கு கார­ண­மாக இருக்­க­லாம் என்று சிங்­கப்­பூர் புகை­யி­லைச் சங்­கம் தெரி­விக்­கிறது.

சட்­ட­வி­ரோத மின்­-சிகரெட்டு களை வைத்­தி­ருந்­த­தற்­காக 2018 பிப்­ர­வரி முதல் 2021 ஜூன் வர பிடி­பட்­ட­வர்­க­ளின் எண்­ணிக்கை ஏறு­மு­க­மாக இருக்­கிறது என்று சுகா­தார அமைச்­சும் சுகாதார அறி­வி­யல் ஆணை­ய­மும் வெளி­யிட்ட தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.

இந்­தப் போக்கு கவலை தரு­கிறது என்று மிலியூ நிறு­வ­னத்தை அமைத்த ஜெரார்டு ஆங் கூறி­னார்.

ஆய்­வில் கருத்து கூறி­ய­வர்­களில் 66 விழுக்­காட்­டி­னர் தாங்­கள் சிக­ரெட் புகைப்­பதைக் குறைத்­துக் கொள்­ளவே மின்­-சிகரெட்டைப் பயன்­படுத்து­வ­தா­கக் கூறி­னர்.

இத­னி­டையே, சிங்கப்பூரில் 2017ல் 11.8 விழுக்­கா­டாக இருந்த அன்­றாட புகைப்­போர் விகி­தம் 2020ல் 10.1 விழுக்­கா­டாக குறைந்து இருக்­கிறது என்று சுகா­தார அமைச்­சின் தேசிய மக்­கள் தொகை சுகா தார ஆய்வு 2019-2020 அறிக்கை தெரி­வித்துள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!