அளப்பரிய சேவைக்கு கிடைத்த அங்கீகாரம், விருது

பல ஆண்­டு­க­ளுக்கு முன்பு சிறப்புத் தேவை­யு­ள்ள மாண­வன் என்று கரு­தப்­பட்ட சிறு­வன் இன்று ராஃபிள்ஸ் கல்வி நிலை­யத்­தில் பயில்கிறார். அதற்கு முக்­கிய கார­ணம் பிரஸ்­ப­டே­ரி­யன் சமூக சேவை ஜூரோங் வெஸ்ட் மையத்­தில் மூத்த கற்­றல் துணை ஆசி­ரி­ய­ரா­கப் பணி­யாற்றி வரும் திரு­மதி ஏ. சுசிலா.

அந்த மாண­வ­ரைப் போல பல மாண­வர்­க­ளின் வாழ்­வில் முக்­கி­ய பங்­காற்­றிய 55 வயது

திரு­மதி சுசி­லா­விற்கு

பாலர் பருவ மேம்­பாட்டு அமைப்­பின் தலைச்­சி­றந்த ஆரம்­ப­கால தலை­யீட்டு நிபு­ணத்­துவ விருது வழங்­கப்­பட்­டுள்ளது.

விருது பெற்ற 23 பாலர்­ப­ருவ, ஆரம்­ப­கால தலை­யீட்டு நிபு­ணர்­கள், நிலை­யங்­களில் திரு­மதி சுசி­லா­வும் ஒரு­வர்.

அண்­மை­யில் உள­வி­யல்

பட்­டப்­ப­டிப்பை முடித்த திரு­மதி சுசிலா, கடந்த 15 ஆண்­டு­

க­ளாகச் சிறப்புத் தேவை­யுள்ள மாண­வர்­கள் மீது கவ­னம் செலுத்தி வரு­கி­றார்.

"சிறப்புத் தேவை­யு­ள்ள மாண­வர்­க­ளுக்கு அல்­லது குழந்தை

களுக்­குப் பாடம் கற்­பிக்­கும்­போது பொறுமை மிக­வும் அவசியம்," என்­றார் அவர்.

ஒரு குழந்தை சிறப்புத் தேவை­யு­ள்ளவரா என்று அறிந்து கொள்­வ­தற்­குப் பல அணுகு

­மு­றை­கள் உள்­ளன என்று கூறிய திரு­மதி சுசிலா, ஒவ்­வொரு குழந்­தை­யும் தனித்­து­வம் வாய்ந்­த­து என்று கூறி­னார்.

"சிலர் எளி­தில் கற்­றுக் கொள்­வர். சில­ருக்கு ஒன்­றைப் புரிந்­துகொள்­வ­தற்கு கூடு­தல் அவ­கா­சம் தேவைப்­படும்," என்­றார் அவர்.

"தங்கள் குழந்­தை­யால் ஒரு செயலைச் செய்ய இய­ல­வில்லை என்­றால் எடுத்த எடுப்­பி­லேயே அது சிறப்புத் தேவை­யு­ள்ள குழந்தை என்று பெற்­றோர் பதற்­றம் அடை­யக்­கூ­டாது. உதா­ர­ணத்­திற்­கு கத்­த­ரிக்­கோலைப் பயன் படுத்­தத் தெரி­யாத குழந்­தை­யி­டம் கத்­த­ரிக்­கோ­லைக் கொடுத்து தாளை வெட்ட சொல்­லும்­போது அந்­தக் குழந்­தைக்கு வெட்டத் தெரி­ய­வில்லை என்­றால் அது சிறப்புத் தேவை­யு­ள்ள குழந்தை என்­ப­தல்ல.

"முத­லில் நாம் எவ்­வாறு

கத்­த­ரிக்­கோலைப் பயன்­ப­டுத்­து­வது என்­பதை அந்­தக் குழந்­தைக்குப் பலமுறை கற்­றுத்தர வேண்­டும். பிறகு அக்குழந்தையால் அந்தச் செயலை செய்ய முடி­கி­றதா என்று கண்காணிக்க வேண்டும். இதே அணுகுமுறையை மற்ற கற்பித்தல் களுக்கும் பயன்படுத்த வேண்டும்," என்றார் திரு­மதி சுசிலா.

"சிறப்புத் தேவை­யு­ள்ளவர்களை நாம் சந்­திக்­கும்­போது, அவர்­க­ளின் குறை­களைப் பார்ப்பதற்கு முன்பு அவர்­களை முத­லில் மனி­த­ராக பார்க்­கக்­ கற்­றுக்கொள்ள வேண்­டும்," என்று திருமதி சுசிலா வலி­யு­றுத்­தி­னார்.

நேற்று நடை­பெற்ற மெய்­நி­கர் விருது வழங்­கும் விழா­வில்

சமூ­தாய, குடும்ப மேம்­பாட்டு அமைச்­சர் மச­கோஸ் ஸுல்­கி­ஃப்லி கலந்­து­கொண்­டார்.

கொவிட்-19 நெருக்­க­டி­நி­லை­யால் ஏற்­பட்­டுள்ள சவால்­க­ளை­யும் தாண்டி குழந்­தை­கள் தொடர்ந்து பாது­காப்­பான சுற்­று­சூ­ழ­லில் பாடம் கற்­பிப்­பதை இந்த ஆசிரியர்கள் உறுதி செய்­தி­ருக்­கி­றார்­கள். ஒவ்வொரு குழந்­தைக்கும் வாழ்க்­கைப் பய­ணத்­தில் நல்லதோர் ஆரம்­பத்­தைக் கொடுக்க ஆரம்­ப­கால பாலர்­ப­ருவ ஆசி­ரி­யர்கள் கடுமை­யாக உழைத்­தி­ருக்­கிறார்­கள், என்று அமைச்­சர் மச­கோஸ் ஸுல்­கி­ஃப்லி புக­ழா­ரம் சூட்­டி­னார்.

வெவ்­வேறு குடும்­பப்

பின்­னணி, ஆற்­றல் ஆகி­ய­வற்­றைக் கொண்ட குழந்­தை­க­ளுக்­குச் சிறப்­பான முறை­யில் பாடம் கற்­பிக்க கடப்­பாடு கொண்­டுள்ள அனைத்து ஆரம்­ப­கால பாலர்­ப­ருவ ஆசி­ரி­யர்­

க­ளுக்கு நன்றி தெரிவிப்பதாக அவர் கூறினார்.

தலை­சி­றந்த ஆரம்­ப­கால பாலர்­

ப­ருவத் தலை­வர் விருதை எண் 997 புவாங்­கோக் கிர­செண்ட்­டில் உள்ள என்­டி­யுசி ஃபர்ஸ்ட் கெம்பஸின் 'மை ஃபர்ஸ்ட் ஸ்கூல்' பாலர் பள்­ளி­யின் நிர்­வாகத் தலை­மை­யா­சி­ரி­யர் திரு­வாட்டி பெர்­லின் டான் பெற்­றார். இரண்டு ஆண்­டு­க­ளுக்கு ஆசி­ரி­ய­ரா­கப் பணி­யாற்­றிய திரு­வாட்டி டான், கடந்த பத்து ஆண்­டு­க­ளாக தலை­மை­யா­சி­ரி­ய­ராகப் பதவி வகித்து வரு­கி­றார்.

"இளம் வய­தி­லேயே தலை­மைப் பொறுப்பை ஏற்க வேண்­டிய சூழல் ஏற்­பட்­ட­தால் எனக்­குப் பதற்­ற­மாக இருந்­தது. குழந்­தை­கள், பெற்­றோ­ரு­டன் இணைந்து செயல்­ப­டு­வ­து­டன் உத்­தி­க­ளைத் திட்­ட­மி­டு­தல், ஊழி­யர்­களை நிர்­வ­கிப்­பது போன்ற புதிய திறன்­க­ளை­யும் கற்­றுக்­கொள்ள வேண்­டி­யி­ருந்­தது. என்னை­விடப் பல ஆண்­டு­கள் அதி­க அனு­ப­வம்­ வாய்ந்த ஆசி­ரி­யர்­க­ளுக்­குத் தலை­மை­தாங்க வேண்­டி­ இ­ருந்­தது.

"தலை­மைத்­து­வம் என்­பது முடி­வில்­லாப் பய­ணம் என நான் நம்­பு­ கி­றேன். ஒவ்­வொரு நாளும் திறந்த மனப்­பான்­மை­யு­டன் இருந்து தன்­னடக்­கத்­து­டன் புதி­ய­வற்­றைக் கற்றுக்­கொள்ள வேண்­டும்," என்று ஸ்ட்ரெட்ய்ஸ் டைம்சிடம் கூறினார் 33 வயது திரு­வாட்டி டான்.

கூடுதல் செய்தி:

சீ. ஜமிலா அக்பர்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!