நிலம் வழியாக நுழைவோருக்கு கட்டாய ஏஆர்டி சோதனை

நிலம் வழியாக நுழைவோருக்கு கட்டாய ஏஆர்டி சோதனை

1 mins read
1d3c3d2f-3a57-46ad-bb8c-c4d9e2be308a
சிங்கப்பூர்-ஜோகூர் இடையிலான நில எல்லை இம்மாதம் 29ஆம் தேதி மீண்டும் திறக்கப்படும் என்று ஜோகூர் முதல்வர் ஹஸ்னி முகம்மது கூறியதாக மலேசிய ஊடகமொன்றில் செய்தி வெளியானதைத் தொடர்ந்து, வர்த்தக, தொழில் அமைச்சு விளக்கமளித்தது. கோப்புப்படம் -

தடுப்பூசி போட்டவர்களுக்கான நில பயணத்தடத்தில் மலேசியாவிலிருந்து சிங்கப்பூருக்கு வருபவர்கள், ஏஆர்டி சோதனையை எடுத்துக்கொள்ளவேண்டும். திங்கட்கிழமை காலை 8 மணி முதல் இந்த விதிமுறை நடப்புக்கு வரும் என்று வர்த்தக தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது. பி.1.1.529 எனப்படும் ஒமிக்ரான் உருமாறிய கிருமி வகை தற்போது பரவி வருவதைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளிவந்தது.

உட்லண்ட்ஸ் தற்காலிக பேருந்து முனையம், குவீன் ஸ்திரீட் பேருந்து முனையம் ஆகிய இரண்டு இடங்களில் இந்த ஏஆர்டி பரிசோதனைகள் செய்யப்படும்

மலேசியாவிலிருந்து சிங்கப்பூருக்கு வரும் பயணிகள் மலேசியாவிலிருந்து வெளியேறுவதற்கு முன்னர், பிசிஆர் அல்லது நிபுணர்களால் நடத்தப்பட்ட ஏஆர்டி சோதனைகளின் முடிவுகளை சிங்கப்பூர் அதிகாரிகளிடம் காட்டவேண்டும் என்று கடந்த புதன்கிழமை அமைச்சு தெரிவித்தது. இரண்டு வயதுக்கும் குறைவான பிள்ளைகளுக்கு சோதனைகள் தேவைப்படவில்லை.