புதிய மின்னிலக்க கட்சி பத்திரிகையை மக்கள் செயல் கட்சித் தொடங்கியுள்ளது. அக்கட்சி, தனது முடிவுகளையும் அரசியல் கொள்கைகளைப் பற்றிய விளக்கங்களையும் விளக்க இந்தத் தளம் தொடங்கப்பட்டது.
பெட்டிர்.எஸ்ஜி என்பது அந்தத் தளத்தின் பெயர். கட்சியின் ‘பெட்டிர்’ இதழின் மறுவடிவமாகக் கருதப்படுகிறது இந்த இணையத்தளம்.
மின்னிலக்க யுகத்திற்குத் தேவைப்படும் தொடர்பு முறைகளை மக்கள் செயல் கட்சி மேம்படுத்த வேண்டும் என்று பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்தார். “பொதுத்தேர்தல் நேரத்தின்போது இது மிகவும் முக்கியம் என்று” அக்கட்சியின் தலைமை செயலாளராக இருக்கும் திரு லீ தெரிவித்தார்.
மக்கள் செயல் கட்சி தனது 93 கிளைகளின் ஆற்றல்களை வலுப்படுத்தவேண்டும் என்று திரு லீ தெரிவித்தார். “கட்சியின் தூதுவர்கள் இயன்றவரை சிறப்பாக செய்வதற்கான வசதிகள் வழங்கப்படும்,” என்று அவர் கூறினார். எனவே அக்கட்சி தனது அரசியல் பயிற்சியை அதிகப்படுத்துவதுடன் இளையர் உறுப்பினர்களுக்கு வழிகாட்ட மூத்த உறுப்பினர்களை நியமிக்கும்.
மக்கள் செயல் கட்சி தனது உறுப்பியத்தைத் தொடர்ந்து புதுப்பித்து வெவ்வேறு பின்புலத்தைச் சேர்ந்த மக்களைச் சேர்க்கவேண்டும் என்று திரு லீ கூறினார்.