வேலை, போலி மின்னஞ்சல் மோசடிகள்: 39 பேர் கைது

போலிசார் 39 பேரைக் கைதுசெய்துள்ளனர். அவர்களில் 35 பேர் ஆண்கள். நால்வர் பெண்கள். அவர்களுக்கு வயது 16 முதல் 65 வரை.  அந்தச் சந்தேகப்பேர்வழிகள் வேலை தொடர்பான மோசடிகளிலும் சிங்கப்பூர் 200வது ஆண்டு நினைவு நாணயங்கள் தொடர்பான போலி மின்னஞ்சல் மோசடிகளிலும் ஈடுபட்டு இருக்கிறார்கள் என்று சந்தேகிக்கப்படுவதாக போலிஸ் தெரிவித்தது.

போலிசார், நவம்பர் 22ஆம் தேதி முதல் 26ஆம் தேதி வரை தீவு முழுவதிலும் எடுத்த நடவடிக்கைகளில் மொத்தம் 113 பேர் விசாரிக்கப்பட்டனர். வேலை தொடர்பான 900 மோசடிகள், $20 மில்லியனுக்கும் அதிக இழப்பை ஏற்படுத்தியுள்ள போலி மின்னஞ்சல் மோசடிகள் தொடர்பில்  அவர்கள் விசாரிக்கப்பட்ட தாக போலிஸ் கூறியது. 
கைதானவர்கள் போக எஞ்சிய 74 பேரிடம் தொடர்ந்து விசாரணை நடக்கிறது. மோசடிப் பேர்வழிகளிடம் சிக்கிய அப்பாவிகள், குற்றக் கும்பல்களிடம் தங்கள் வங்கிக் கணக்குகளை விலைக்குக் கொடுத்து இருக்கிறார்கள் அல்லது சிங்பாஸ் விவரங்களைத் தெரிவித்து இருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!