4ஜி தலைவர் தேர்வு: இன்னும் கொஞ்சம் காலம் பிடிக்கும்

அடுத்த தேர்தலுக்கு முன்னதாகவே தீர்வு காணப்படும் என பிரதமர் லீ நம்பிக்கை

4ஜி குழு­வி­னர் தங்­க­ள் தலை­வரைத் தேர்ந்­தெ­டுப்­ப­தற்கு மேலும் கொஞ்­சம் காலம் பிடிக்­கும் என்று பிர­த­மர் லீ சியன் லூங் தெரி­வித்து இருக்­கி­றார்.

இருந்­தா­லும் அடுத்த பொதுத் தேர்­த­லுக்கு முன்­பா­கவே அவர்­கள் இந்­தப் பிரச்­சி­னைக்­குத் தீர்வு கண்டு­வி­டு­வார்­கள் என்று தான் நம்­பு­வ­தாக பிர­த­மர் கூறி­னார்.

மக்­கள் செயல் கட்சி மாநாட்டில் பேசிய கட்­சி­யின் தலை­மைச் செய­லா­ள­ரான திரு லீ, 4ஜி குழு­வி­னர் குறித்த நேரத்­தில் விவே­க­மிக்க முடிவு எடுப்­பார்­கள் என்­ப­தும் நல்ல கரங்­களில் ஆட்­சி­யைப் ஒப்­ப­டைக்க தன்­னால் முடி­யும் என்­ப­தும் நிச்­சயம் என்று தெரி­வித்­தார்.

அடுத்த பொதுத் தேர்­தலை 2025 நவம்­ப­ருக்கு முன்­பாக நடத்த வேண்­டும். 4ஜி தலை­வர்­க­ளுக்கு கொவிட்-19 கடு­மை­யான ஒரு சோத­னை­யாக இருக்­கிறது.

தனிப்­பட்ட முறை­யி­லும் குழு­வா­க­வும் அவர்­க­ளின் உறு­திக்கு சோதனை வந்­துள்­ளது என்று குறிப்­பிட்ட திரு லீ, கொவிட்-19 சூழ்­நிலையைத் திறம்­பட சமா­ளிக்­கும் பேரும் புகழும் 4ஜி முழு குழு­வையே சாரும் என்று தெரிவித்தார்.

“அந்­தக் குழுவை சிங்­கப்­பூர் சார்ந்­தி­ருக்க முடி­யும். சாத­க­மான நேரத்­தி­லும் பாத­க­மான நேரத்­திலும் அதை சிங்­கப்­பூர் நம்ப முடியும்,” என்று பலத்த கர­வொ­லிக்கு மத்தி­யில் திரு லீ குறிப்­பிட்­டார்.

கட்சி உறுப்­பி­னர்­கள் அனை­வரும் 4ஜி தலை­வர்­க­ளுக்கு முழு ஆத­ரவு அளிக்க வேண்­டும் என்றும் திரு லீ கேட்­டுக்­கொண்­டார்.

கட்­சி­யில் தலை­மைத்­து­வப் புதுப்­பிப்புப் பிரச்­சினை பற்றி திரு லீ பேசி­னார். பொருத்தமானவர்களைத் தேர்ந்­தெ­டுத்து எதிர்­கால தேர்­தல்­களில் அவர்­களை வேட்­பா­ளர்­களாக நிறுத்­து­வது உள்­ளிட்ட பல அம்­சங்­கள் குறித்­தும் அவர் உரை­யாற்­றி­னார். உறுப்­பி­னர் சேர்ப்பு நடைமுறையைக் கட்சி ஏற்­கெ­னவே தொடங்கி­விட்­டது என்­றாரவர்.

புதுப்­பிப்பு என்­பது நாடா­ளுமன்ற உறுப்­பி­னர்­கள், கிளைச்­செ­ய­லா­ளர்­களுக்கு மட்­டு­மல்­லா­மல் பிர­த­மர் உள்­ளிட்ட அமைச்­சர்­க­ளுக்­கும் தேவைப்­ப­டு­வ­தாக இருக்­கிறது என்று திரு லீ கூறி­னார்.

அர­சி­யல்­ வா­ரி­சு தொடர்­பான தனது திட்­டங்­கள் கொவிட்-19 கார­ண­மாக தாம­த­ம­டைந்து இருப்­பதா­க அவர் தெரி­வித்­தார்.

4ஜி தலை­வ­ராகத் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்ட துணைப் பிர­த­மர் ஹெங் சுவீ கியட் அந்­தப் பொறுப்­பில் இருந்து தான் வில­கிக்­கொள்­வ­தாக ஏப்­ர­லில் அறி­வித்­தார்.

துணைப் பிர­த­மர் என்ற முறை­யில் திரு ஹெங், 4ஜி குழு­வின் முக்­கிய உறுப்­பி­ன­ராகத் தொடர்ந்து இருந்து கடும் பொறுப்­பு­களை நிறை­வேற்றி வரு­வ­தாக திரு லீ கூறி­னார். திரு ஹெங் வில­கிக்­கொண்­டதை அடுத்து அர­சி­யல் வாரி­சுப் பிரச்­சி­னையை 4ஜி அமைச்­சர்­கள் மீண்­டும் ஆராய்ந்து இருப்­ப­தாக பிர­த­மர் குறிப்­பிட்­டார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!