மசெகவின் சமூக அரசியல் இணையத்தளம் தொடக்கம்

மக்­கள் செயல் கட்சி, தனது முடிவு­க­ளை­யும் கொள்கை நிலை­க­ளை­யும் இன்­னும் சிறந்த முறை­யில் விளக்க ஏது­வாக நேற்று புதி­தாக சமூக அர­சி­யல் இணை­யத்­த­ளம் ஒன்­றைத் தொடங்­கி­யது.

Petir.sg என்ற அந்­தப் புதிய இணை­யத்­த­ளம், மசெ­க­வின் செய்­திக்­ க­டி­த­மான ‘பெட்­டி­ரின்’ மின்­னி­லக்க அங்­க­மாக இருக்­கும்.

மசெக மாநாடு நேற்று நடந்­தது. அதில் புதிய இணை­யத்­தளம் தொடங்­கப்­பட்­டது.

மாநாட்­டில் உரை­யாற்­றிய கட்சி­யின் தலை­மைச் செய­லா­ள­ரும் பிர­த­ம­ரு­மான லீ சியன் லூங், மின்­னி­லக்க யுகத்­தைக் கருத்­தில் கொண்டு அதற்­குத் தோதாக கட்சி தனது தகவல்தொடர்பு ஏற்­பா­டு­களை, மக்­களை எட்­டு­வதற் கான ஏற்­பா­டு­களை மேம்­படுத்த வேண்­டிய தேவை இருப்­ப­தா­கத் தெரி­வித்­தார்.

“இந்த ஏற்­பா­டு­க­ளைச் செம்­மை­யான முறை­யில் மேம்­ப­டுத்த வேண்­டிய தேவை ஏற்­பட்­டுள்­ளது. மக்­கள் சமூக ஊட­கத்­தில் அல்லது இதர தளங்­களில் எங்கு இருந்­தா­லும் அவர்­களை எட்ட வேண்டிய தேவை இருக்கிறது,” என்று அவர் கூறி­னார். குறிப்­பாக தேர்­தல் பிர­சார காலத்­தில் இது மிக முக்­கி­ய­மா­னது என்­றார் அவர்.

மசெக தனது செயல் இயந்­தி­ரத்­தைப் பலப்­ப­டுத்த இதர இரு செயல்­களைச் செய்­ய­வேண்­டும் என்ற திரு லீ, கட்­சிக் கிளை­களின் செய­லாற்­றல்­க­ளைத் தீவிரப்­ப­டுத்­து­வ­தும் உறுப்­பி­யத்­தைப் புதுப்­பிப்­ப­தும் அந்த இரண்டு காரியங்கள் என்­றார்.

மசெக, தனது 93 கிளை­களுக்கு இடை­யில் தலை­சி­றந்த நடை­மு­றை­க­ளைப் பகிர்ந்­து­கொள்ளும் என்­றும் பழுத்த அனு­ப­வ­சாலி­கள் இளை­ய­ருக்கு வழி­காட்ட ஏற்­பா­டு­க­ளைச் செய்­யும் என்­றும் பிர­த­மர் தெரி­வித்­தார்.

மசெக தொண்­டர்­கள் தேர்­தல் நேரத்­தில் மட்­டு­மின்றி கட்­சி­யின் வெள்ளை சீரு­டை­யு­டன் அப்­போதைக்கு அப்­போது மக்­கள் கண்­ணில் பட வேண்­டும் என்­றும் திரு லீ குறிப்பிட்டார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!